Sivakarthikeyan-RajiniMurugan-Opens-Todayபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் திரைப்படம் வரும் ஜனவரி 14-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இதை தொடர்ந்து இன்று முதல் ரஜினிமுருகன் படத்தின் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், மலையாள திரையுலகை சேர்ந்தவர் என்பதும் அங்கு அவருக்கு மிகப்பெரிய மார்கெட் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் இப்படம் மிக பிரமாண்டமாக வெளியாக போவதாகவும் சிவகார்த்திகேயன் கேரியரில் இது மிக முக்கியமான தருணம் எனவும் சொல்லப்படுகிறது.