Connect with us
Cinemapettai

Cinemapettai

Reviews | விமர்சனங்கள்

நம்ப ஊரு (சூப்பர்) ஹீரோ திரைவிமர்சனம்

விஷாலின் இரும்புத்திரை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரம்மாண்ட படமே ஹீரோ. 90 ஸ் கிட்ஸ்களின் பாரிட் சக்திமான் உடன் ஆரம்பம் ஆகிறது படம்.

சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கருடன் இணைந்து பிரிண்டிங் பிரஸ் ஒன்றை நடத்துகிறார். இதுமட்டுமன்றி அதில் போலி சான்றிதழ்கள் அடித்த ஏரியா மக்களுக்கும் தருகிறார். மேலும் புரோக்கர் ஆக செயல்பட்டு பலருக்கு முன்னணி காலேஜுகளில் கமிஷன் வாங்கிகொண்டு சீட் வாங்கி தருகிறார். பார்த்தவுடன் கல்யாணி பிரியதர்ஷன் மீது காதல்.

வில்லனாக அபய் தியோல். மாணவர்களை தொழிலாளிகளாக தான் உருவாக்க வேண்டும் என்பது இவரின் நோக்கம். கார்ப்ரேட் நிறுவனங்கள் லாபத்திற்காக உழைப்பவர். புத்திசாலி மாணவர்களை லோபோடோமி செய்து முடமாக்குகிறார். மறுபுறம் புரட்சிகரமான உள்ளது அர்ஜுனின் நோக்கம். பெயில் ஆன மாணவர்களை எல்லாம் ஒன்று திரட்டி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளியுலகிற்கு கொண்டு வருவதே இவர் வேலை.

இவானா கண்டுபிடித்த எஞ்சின் வாயிலாக அர்ஜுன் – சிவகார்த்திகேயன் – அபய் தியோல் என மூவரும் முக்கோண வடிவில் நிற்கின்றனர். நம்ம பிரச்சனையை நாம தான் சமாளிக்கணும், நமக்கு நாம் தான் ஹீரோ என்ற கான்செப்டில் சிவா வில்லன் க்ரூப்பை அழித்து, மாணவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்று தருவதே கிளைமாக்ஸ்.

சினிமாபேட்டை அலசல் – அர்ஜுன் தான் படத்தின் ஹீரோ என்றால் அது மிகையாகாது. ஜென்டில் மேன் பார்ட் 2 என கூட தலைப்பு வைத்திருக்கலாம், அந்தளவுக்கு உள்ளது மனிதரின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ். பெயில் ஆன மாணவர்களின் கண்டுபிடிப்பை பார்க்கும் பொழுது நண்பன் பட கிளைமாக்ஸ் விஜய் காட்சிகள் தான் கண் முன்னே வந்து போகிறது.

மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதில், குழந்தைகளின் திறமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே படத்தின் மெஸேஜ். ஷங்கர் படம் போல மெஸேஜை பிரம்மாண்டத்தை கலந்து கொடுத்துள்ள இயக்குனருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – பலரும் எடுக்க தயங்கும் சூப்பர் ஹீரோ கதையை இயக்குனர் சாமர்த்தியமாக கையாண்டுள்ளார். எனினும் இரும்புத்திரை போன்ற படத்தை எடுத்துவிட்டு, இத்தனை லாஜிக் மீறல்கள் இவர் படத்தில் உள்ளது என்பது சிறிய ஏமாற்றத்தையே தருகிறது.

வேலைக்காரன் படத்தில் சிவா நடித்த சமயத்தில் பல இடங்களில் நமக்கு நெருடல் இருந்தது. ஆனால் இப்படத்தில் தன்னை மெருகேற்றி ரோலுக்கு செட் ஆகிவிட்டார். நடிகராக சிவா அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டார் என்பது நிஜம். யுவனின் இசை பக்க பலம். Rough noteல் தான் குழந்தையின் ஆசை உள்ளது என்பது டூ மச் சினிமாத்தனம். கிளைமாக்ஸ் பைக் சேசிங்லாம் எதுக்கு வைச்சாங்க என்றே யோசிக்க தோன்றுகிறது

படத்தின் வசனங்கள் அனைத்தும் பளீச். இசையில் யுவன், ஒளிப்பதிவில் ஜார்ஜ் வில்லியம்ஸ், தங்கள் பணியை பக்காவாக செய்துள்ளார். சில சொதப்பல்கள் இருந்தாலும், படம் நிறைவாகவே உள்ளது.

முகமூடி தொடர்ந்து சூப்பர் ஹீரோ ஜானரில் நல்ல படைப்பே இப்படம்.

சினிமாபேட்டை ரேட்டிங் 3 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top