ரஜினி கூப்பிட்டு பாராட்டிய பின் தலைக்கனத்தால் ஆடும் SK- யின் நண்பர்.. பெயரை கெடுத்த வெப் சீரியஸ்

Sivakarthikeyan Friend: ரஜினியை பொறுத்தவரை என்னதான் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக முதலிடத்தில் இருந்தாலும் திறமையுடன் சினிமாவிற்குள் நுழையும் பலரையும் கூப்பிட்டு பாராட்டுவது அவருடைய செயல்களில் ஒன்று. அப்படி காமெடியாகவும், பாடல் ஆசிரியராகவும், இயக்குனராகவும் சினிமாவில் வளர்ந்து வந்த ஒருவரே ரஜினி கூப்பிட்டு பாராட்டி இருக்கிறார்.

அத்துடன் அவருடைய திறமையை மெய் மறந்து சில படங்களில் அவர்தான் பாடல்களை எழுத வேண்டும், பாட வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். இதனால் அவரும் ரஜினிக்கு ஏற்ற மாதிரி எல்லா விஷயங்களையும் செய்து ஒரு தனித்துவமான ஸ்டைலை வாங்கி கொடுத்தார். ஆனால் தற்போது அவருக்கு கொஞ்சம் தலைக்கனம் கூடிவிட்டதாக தெரிகிறது.

அவர் வேறு யாருமில்லை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பராக சினிமாவிற்குள் இருக்கும் அருண் ராஜா காமராஜ். இவர் கானா, நெஞ்சுக்கு நீதி படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனராக வெற்றி பெற்றுவிட்டார். அத்துடன் நடிகராகவும் 10 படங்களுக்கும் மேலாக நடித்து, பாடல் ஆசிரியராகவும் 25 படங்களில் பணியாற்றி இருக்கிறார். இதனை தொடர்ந்து பாடகராகவும் 15 பாடல்களில் பாடி கொடுத்திருக்கிறார்.

Also read: ரஜினி, கமலுக்கு முடிவு கட்டிய விஜய்.. யாருமே எதிர்பார்க்காத அரசியல் ஆக மாறப் போகுது வெயிட் அண்ட் சீ

இப்படி இத்தனை திறமைகளை வைத்து மென்மேலும் வளர்ந்து வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது ஜெய் வைத்து லேபிள் என்கிற வெப் சீரியஸ் ஒன்றை எடுத்து இருக்கிறார். இந்த வெப் சீரிசை பார்க்கும் பொழுது நிறைய கெட்ட வார்த்தைகள் காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு பயன்படுத்தி இருக்கிறார்.

இதையெல்லாம் பற்றி அவரிடம் கேட்டதற்கு அந்த கெட்ட வார்த்தைகள் அனைத்தும் நாம் பேசும் வார்த்தைகள் தானே. அதை ஒன்னும் நான் பெருசாக காட்டவில்லையே என்று கொஞ்சம் ஆணவத்துடனே பதில் அளித்து இருக்கிறார். இவர் என்னதான் சொல்லி சமாளித்தாலும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படியாக இல்லாமல் தான் அந்த வெப்சீரியஸ் அமைந்திருக்கிறது.

இவருடைய இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் இரண்டு வெற்றி படங்களை கொடுத்திருக்கிறோம். அத்துடன் நமக்கான அங்கீகாரம் சினிமாவில் ஏதோ ஒரு வடிவத்தில் கிடைத்துவிடும். அதனால் நம் இஷ்டப்படியே நமக்கு என்ன தோன்றுகிறதோ, அதன்படி போகலாம் என்று வெப் சீரியஸில் அதிகமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் தற்போது இந்த வெப் சீரியஸ் மூலம் இவருடைய பெயர் மொத்தமும் டேமேஜ் ஆகிவிட்டது.

Also read: சமாதிக்கு போனா சந்தி சிரிக்க வச்சுருவாங்களே.! ஜகா வாங்கும் சிவகார்த்திகேயன்.. வசமாக சிக்கிய அயலான்

- Advertisement -spot_img

Trending News