புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

11 நாட்களில் அமரன் செய்த வசூல்.. நின்னு விளையாடும் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் நடிப்பில் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்த படமாக மாறி இருக்கிறது அமரன். ராஜ்குமார் பெரியசாமி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி அமரன் படத்தை எடுத்திருந்தார். இந்த படத்தை கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார்.

ஒருபுறம் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். அதோடு பெரிய பிரபலங்களும் படத்தைப் பார்த்துவிட்டு தங்களது வாழ்த்துக்களை பட குழுவுக்கு தெரிவித்து வந்தனர். அதே சமயத்தில் மற்றொருபுறம் படத்திற்கு எதிர்மறையான கருத்துக்கள் வருகிறது.

அதாவது முகுந்த் வரதராஜனின் ஜாதியை ஏன் குறிப்பிடவில்லை என பல பிரச்சனையை செய்தனர். மற்றொருபுறம் சிறுபான்மை முஸ்லிம்களை தவறாக சித்தரித்து அமரன் படத்தில் காட்டியுள்ளதாகவும் கண்டனங்கள் இருந்தது. இதனால் கமலின் அலுவலகத்தை முற்றுகை இடவும் முன் வந்தனர்.

அமரன் 11 நாள் வசூல்

இந்த சூழலில் என்னதான் வெளியில் இவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் படம் எதிர்பார்த்த வசூலை குவித்து தான் வருகிறது. 11 நாட்களைக் கடந்த நிலையில் இப்போது 200 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. அதன்படி உலகம் முழுவதும் இதுவரை 215 கோடி வசூல் செய்துள்ளது.

இப்போதும் தியேட்டருக்கு மக்கள் கூட்டம் குடும்பம் குடும்பமாக சென்று அமரன் படத்தை பார்த்து வருகிறார்கள். மேலும் இந்த படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாசுக்கு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் சிவகார்த்திகேயன் வாட்ச்சை பரிசாக வழங்கினார்.

மேலும் அமரன் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு பல இடங்களுக்கு சென்று தங்களது நன்றியை தெரிவித்தார்கள். விரைவில் கங்குவா படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதுவரையிலும் அமரன் படம் ஹவுஸ்ஃபுல்லாக தான் இருக்கப் போகிறது.

- Advertisement -

Trending News