தளபதி விஜய்க்காக பாடல் எழுதும் முன்னணி ஹீரோ.. விக்னேஷ் சிவனுக்கு போட்டியாக நெல்சன் இறக்கிய மாஸ்டர் பீஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இதுமட்டுமின்றி பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் பாடல் ஒன்றை எழுதியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தளபதி விஜயின் இன்ட்ரோ பாடலை எழுதியுள்ளார் என விக்கிபீடியா பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மனதில் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் விக்கிபீடியா பக்கத்தில் யார் வேண்டுமானாலும், எந்த தகவலையும் மாற்றி எழுதலாம் என்பதால், இது எந்த அளவிற்கு உண்மை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் எதுவும் உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். காரணம் முன்னதாக நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா என்ற பாடல் மாபெரும் வெற்றி பெற்றது. எனவே பீஸ்ட் படத்திலும் அதுபோன்ற பாடல் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

beast-vijay-cinemapettai
beast-vijay-cinemapettai

வலிமை படத்திற்காக விக்னேஷ் சிவன் அஜித் குமாருக்கு அறிமுகப் பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதேபோல் தற்போது சிவகார்த்திகேயனை விஜய்க்கு அறிமுக பாடலை எழுத விட்டு வேடிக்கை காட்ட  உள்ளாராம் நெல்சன். சபாஷ் சரியான போட்டி!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்