நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு தொகுப்பாளராக வலம் வந்தார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா படம் மூலம் வெள்ளத்திரையில் அறிமுகமானார்.

அதன் பிறகு அவரின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்றது. அதனை தொடர்ந்து அவர் நடித்த காக்கிச்சட்டை,எதிர்நீச்சல், மான்கரத்தே, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தபடாத வாலிபர் சங்கம், ரெமோ ஆகிய படங்கள் தொடர் வெற்றி பெற்றது.

நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா கூறுகையில் நான் ஆரம்பத்தில் இருந்து சிவாவை பார்க்கிறேன். ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ, அப்படித்தான் இப்பவும் உள்ளார்.

கொஞ்சம் கூட அவர் மாறவே இல்லை. அவருடன் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்தேன். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் சிரிச்சுச் சிரிச்சு எனக்கு வயிறு வலிக்கும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here