இனி சிவகார்த்திகேயனை கையில் பிடிக்கவே முடியாது.. 2024 ஆம் ஆண்டு வரை பயங்கர பிசியாம்

சினிமாவில் ஒரு படம் ஹிட் கொடுக்க மிகவும் போராட வேண்டியிருக்கும். ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு முறை ஹிட் கொடுத்து விட்டால் மீண்டும் மீண்டும் அந்த நடிகரிடமிருந்து அதையே தான் எதிர்பார்ப்பார்கள்.

எனவே அந்த நடிகர் அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். சற்று தடுமாறினாலும் மீண்டு வர சில காலம் தேவைப்படும். தற்போது சிவகார்த்திகேயன் இந்த சூழ்நிலையில் தான் உள்ளார். கடந்த மாதம் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது.

எனவே அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாக உள்ள அடுத்தடுத்த படங்களுக்கு அதிக வரவேற்பும், எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் தற்போது கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார். மனுஷன் எப்படி இவ்வளவு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தார் என திரையுலகம் ஆச்சரியத்தில் உள்ளது.

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. இதுதவிர அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் பெயரிடப்படாத புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து அசோக் இயக்கத்தில் சிங்கப்பாதை, ராஜ்குமார் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம், ராம்குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம், வேல்ஸ் பிலிம்ஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலா ஒரு படம் என கைவசம் 5 புதிய படங்களை வைத்துள்ளாராம். இதனால் 2024 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் கால்ஷீட் டைரி நிரம்பி விட்டதாம்.

இத்தனை படங்கள் இருப்பது பெரிதல்ல. இவை அனைத்தும் வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் விஜய் சேதுபதி நிலைமை தான் சிவகார்த்திகேயனுக்கும் ஏற்படும். விஜய் சேதுபதியும் இப்படித்தான் ஏராளமான படங்களில் நடித்து தொடர்ந்து தோல்வி படங்களை வழங்கி அவரே அவரின் மார்க்கெட்டை கெடுத்து கொண்டார். சிவா என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்