fbpx
Connect with us

Cinemapettai

மெகா ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் சிவகார்த்திகேயன்.. மரண மாஸ் படத்திற்கு செட் ஆவாரா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மெகா ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் சிவகார்த்திகேயன்.. மரண மாஸ் படத்திற்கு செட் ஆவாரா?

தமிழ் சினிமாவில் மிக விரைவில் 15 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். இவரது வளர்ச்சி கோலிவுட்டில் பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் படத்திற்கு படம் தன்னுடைய நடிப்பு, நடனம் போன்றவற்றை மெருகேற்றி வருகிறார். அந்த வகையில் முதலில் காமெடியாக ஆரம்பித்த தன்னுடைய கேரியரை பிறகு கமர்ஷியல் வட்டத்துக்குள் கொண்டு சென்றார்.

அதற்கு இயக்குனர் பாண்டிராஜ் படங்களில் நடித்தது மிகமுக்கிய காரணமாகும். அந்த வகையில் படத்திற்கு இரண்டு சண்டைக் காட்சிகளை வைத்து வந்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஒரு தெலுங்கு பட ரீமேக்கில் 5 சண்டை காட்சிகளை வைத்து நடிக்க உள்ளார்.

அதிரடி ஆக்ஷன் படமாக சமீபத்தில் தெலுங்கில் மாபெரும் வசூலை குவித்த திரைப்படம் அளவைகுந்தபுரமுலோ. அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் தமன் இசையில் வெளியாகி மரண வெற்றியை பெற்றது.

தற்போது இந்த படத்தின் ரீமேக் உரிமையை கிட்டத்தட்ட உறுதி செய்த சிவகார்த்திகேயன், அந்தப் படத்தை தன்னுடைய எஸ் கே புரோடக்சன்ஸ் மூலம் தயாரிக்க முடிவு செய்துள்ளாராம்.

அல்லு அர்ஜுன் படம் முழுவதும் மாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அது சிவகார்த்திகேயனுக்கு செட்டாகுமா என கோலிவுட் வட்டாரங்களில் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.

Continue Reading
To Top