Connect with us

Cinemapettai

சிவகார்த்திகேயன் பணத்தில் ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்.. அடி தூள் பண்ணும் ஆர்மி

sk-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் பணத்தில் ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்.. அடி தூள் பண்ணும் ஆர்மி

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் தற்போது முன்னணி நாயகனாக வளர்ந்து வருகிறார். அதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் திறமை உள்ளவர்களை மேடையேற்றி அழகு பார்ப்பதிலும் அவருக்கு நிகர் அவரே.

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் பிக் பாஸ் சீசன் 3 இல் பிரபலமான கவினை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மேலும் அந்த படத்தில் சமீபகாலமாக கவினின் காதலியாக பேசப்பட்ட லாஸ்லியா நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன் சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். அதில் கவினும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

இதற்குமுன் சிவகார்த்திகேயன் தயாரித்த கனா, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா ஆகிய படங்கள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையிலிருந்து ரியோ ராஜ், வெள்ளித் திரைக்கு வர காரணமாக இருந்தவர் சிவா தான் என்பது அனைவரும் அறிந்ததே.

siva-kavin

siva-kavin

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top