உதயநிதிக்கு அரசியல் கற்றுக் கொடுத்த சிவகார்த்திகேயன்.. இரு தம்பி உனக்கு ஒரு நாள் இருக்கு

சிவகார்த்திகேயன் தற்போது அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். அவரின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில், மேலும் பல புது படங்களில் கமிட்டாகி அவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அவருடைய படங்களுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. டாக்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது அவரின் நடிப்பில் டான் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் அந்த திரைப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. சமீபகாலமாக உதயநிதி தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல திரைப் படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் விக்ரம் திரைப்படத்தையும் இவர்தான் வெளியிட இருக்கிறார்.

அதன்படி விரைவில் வெளியாக இருக்கும் டான் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி, சிவகார்த்திகேயனை மிகவும் புகழ்ந்து, பாராட்டிப் பேசி இருந்தார். அதன்பிறகு படக்குழுவினர் அனைவரும் அந்த டிரைலர் காட்சிகளை ரசித்து பார்த்தனர்.

அதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவனாக அகத்தியிருக்கும் சிவகார்த்திகேயன் இறுதியில் அரசியல்வாதியாக வேண்டும் என்று கூறியிருப்பார். அதற்கு அவருடைய நண்பர் வேண்டாம் அரசியல்வாதியானால் நிறைய பொய் சொல்லனும் என்று கூறுவார்.

இந்த காட்சி வரும்போது சிவகார்த்திகேயன் மிகவும் சங்கடமாக உதயநிதியை பார்த்து சிரித்தார். இதற்கு உதயநிதியும் சிரித்த படி எதுவும் கூறாமல் தலையை ஆட்டியபடியே டிரைலரை பார்த்து கொண்டிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது சோசியல் மீடியாவில் பட்டையை கிளப்பி வருகிறது.

மிகப்பெரிய அரசியல் குடும்பத்து வாரிசான உதயநிதி தற்போது எம்எல்ஏவாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இப்போதைய முதல்வரின் மகனும் கூட. அப்படி இருக்கும்போது அவரை வைத்துக் கொண்டு ட்ரைலரில் இப்படி ஒரு காட்சியை வைத்த சிவகார்த்திகேயனை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் அவருக்கே அரசியல் பற்றி சொல்றீங்களா உங்களுக்கு இருக்கு ஒரு நாள் என்று ரசிகர்கள் ஜாலியாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

- Advertisement -