புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அஜித்தை முந்திய சிவகார்த்திகேயன்.. எவ்ளோ வசூல் தெரியுமா? விடாமல் முட்டுக் கொடுக்கும் ஃபேன்ஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் அமரன். இப்படத்தில் சிவாவுடன் இணைந்து சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தை ரூ.200 கோடி பிரமாண்ட பொருட்செலவில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேசனல் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் லிஸ்டில் தி கோட், வேட்டையன் ஆகிய படங்களைத் தொடர்ந்து அமரன் படமும் இடம்பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவாவின் அமரன் படம் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளதால் இப்படம் 150 கோடிக்கு மேல் வசூல் குவித்துச் சாதனை படைத்துள்ளது. சிவாயின் கேரியரில் இப்படம் புதிய மார்க்கெட்டை திறந்துவிட்டிருப்பதால், இனி அவரது படங்கள் அமரன் படத்தின் பிசினஸ், வசூல், டிஜிட்டர் மார்கெட் நிலவரம், ஆடியோ ரைட்ஸ் இதெல்லாம் இதைப் பொருத்துதான அமையும் என்பதால் சிவாவுடன் மகிழ்ச்சியில் உள்ளார்.

அத்துடன் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடம் அமரன் படத்தைப் பார்த்துவிட்டு, சிவா, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்துப் பாராட்டினார். சினிமா பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

இப்படம் வசூல் சாதனையும் பாராட்டுகளும் பெற்றாலும் கூட, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியது. காஷ்மீர் அரசியல் பற்றிப் பேசாமல் போனது பற்றிப் பல சினிமா பிரபலங்கள் இப்படத்தை விமர்சித்து வருகின்றனர்.

அஜித்தை முந்திய சிவகார்த்திகேயன்

இந்த நிலையில், இப்படம் கேரளாவில் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது. அதாவது, முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக 7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த வசூல், அஜித்தின் ஆரம்பம் பட வசூலான 6.5 கோடி ரூபாயை விட அதிகம் என்பதுதான் இப்போதையா கோலிவுட்டின் ஹாட் டாப்பிக். இதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

முட்டுக்கொடுக்கும் அஜித் ஃபேன்ஸ்

இருப்பினும், ’’பல ஆண்டுகளுக்கு முன்பு அஜித் செய்த வசூல் சாதனையை இப்போது அமரன் படம் மூலம் சிவகார்த்திகேயன் முறியடித்தாலும், ஆரம்பம் படத்துக்குப் பின் எத்தனை படங்களில் அஜித் நடிச்சிருக்காரு. அவரோட படங்கள் கேரளாவில எத்தனை கோடி வசூலிச்சிருக்குன்னு கணக்குப் போடுங்க. அதுமட்டுமில்ல, அவரது நடிப்புல விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்கள் அஜித் கேரளாவில் புதிய வசூல் சாதனை படைக்கும்’’ என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News