சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் நடுவில் பல சறுக்கல்கள் சந்தித்தாலும் அதிலிருந்து ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் தற்போது சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் மற்றும் டான் படங்கள் 100 கோடி வசூலை தாண்டி உள்ளது.
ஏனென்றால் இந்த படங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்துள்ளது. ஆரம்பத்தில் தளபதி விஜய் குடும்ப சென்டிமென்ட் கலந்த ஜாலியான கதையைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. தற்போது அதே பார்முலாவை தான் சிவகார்த்திகேயனும் பின்பற்றி வருகிறார்.
ஆனால் விஜய் தற்போது குடும்ப சென்டிமென்ட் படங்களை ஒதுக்கி வைத்தவிட்டு ஆக்சன் படங்களிலேயே நடித்து வந்தார். அந்த வகையில் மாஸ்டர் படம் மிகப்பெரிய வெற்றி கொடுத்தாலும் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஏனென்றால் இப்படத்தில் ரசிகர்களே நம்ப முடியாத பல விஷயங்களை நெல்சன் திணித்திருந்தார்.
இதனால் இணையத்தில் பீஸ்ட் படம் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் விஜய் தன்னுடைய அடுத்த படத்தில் இது போன்ற விஷயங்கள் இருக்கக் கூடாது என்றும் ரசிகர்கள் நம்பும் படியான விஷயங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என கறாராக சொல்லி உள்ளாராம்.
மேலும் தற்போதும் குடும்ப சென்டிமென்ட் கதைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளதால் விஜய் மீண்டும் பழைய ரூட்டையே கையில் எடுத்துள்ளார். மேலும் விஜய்க்கு ஏராளமான குழந்தை ரசிகர்களும் உள்ளனர். இதனால் வம்சி இயக்கும் தளபதி 66 படத்தில் அத்வைத் வினோத் மற்றும் ஹர்ஷாதா கார்த்திக் என்ற இரண்டு குழந்தைகள் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்த இரு குழந்தைகளின் தந்தையாக விஜய் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் கதைக்கு எது தேவையோ அதை மட்டுமே வைக்கும்படியும் அதிகப்படியான விஷயங்களை தவிர்க்கும்படி இயக்குனரிடம் விஜய் கேட்டுக் கொண்டுள்ளாராம். இவ்வாறு தளபதி 66 படத்திற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறாராம் விஜய்.