மீண்டும் அதே நிலமைக்கு வந்த சிவகார்த்திகேயன்.. படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்

சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே கடன்கள் நிறைய இருந்து தற்போது தான் மீண்டு வந்தார். டாக்டர், டான் போன்ற இரண்டு வெற்றி படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு, அவருடைய நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் பிரின்ஸ் படத்திற்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய அடி விழுந்து மீண்டும் அவரை கடனாளியாக மாற்றியிருக்கிறது.

காக்கி சட்டை: 2015 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் போலிஸ் கெட்டப்பில் நடித்த இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா எடுத்திருப்பார். இந்த படத்தில் உடல் உறுப்பு திருட்டை கருப்பொருளாகக் கொண்டு எடுத்ததால் ஏற்கனவே இதுபோன்ற கதையம்சம் கொண்ட படங்கள் நிறைய வெளியாகி ரசிகர்களிடம் படுதோல்வியை சந்தித்தது.

Also Read: தீபாவளிக்கு நமுத்துப்போன பட்டாசான பிரின்ஸ்.. ஏமாற்றத்தை கொடுத்த முதல் நாள் வசூல்

சீமராஜா: 2018 ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சமந்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தை காமெடி கலந்த ஆக்ஷன் படமாக ரசிகர்களுக்கும் விருந்தளித்தனர். இருப்பினும் இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காமல் படுதோல்வியை சந்தித்தது.

மிஸ்டர். லோக்கல்: காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். இதற்கு முன்பு இருவரும் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்து மீண்டும், இந்த படத்தில் ஜோடி சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படமும் சிவகார்த்திகேயனுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை.

Also Read: ஒரே மாதிரி கதையை இரண்டு படங்களாக எடுத்த இயக்குனர்கள்.. எது காப்பி என்று குழம்பிய ரசிகர்கள்

ஹீரோ: 2019 ஆம் ஆண்டு மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிரடி த்ரில்லர் படமாக இந்த படம் வெளியானது. இருப்பினும் இந்தப் படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாததால் சரியான வரவேற்பு கிடைக்காமல் வசூலில் பயங்கர அடி வாங்கியது.

பிரின்ஸ்: சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் பிரின்ஸ். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார். மேலும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே இப்படம் உருவாகி இருந்தது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்திருந்தார். இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காமல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதாவது படத்தில் லாஜிக் இல்லை என்றும் பிரின்ஸ் படம் ஏமாற்றத்தை தந்தது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இவ்வாறு சிவகார்த்திகேயன் தோல்வி பட லிஸ்டில் தற்போது ரிலீஸ் ஆகியிருக்கும் பிரின்ஸ் படமும் ஐந்தாவது படமாக மாறி, அவரை மீண்டும் கடனாளியாக மாற்றுகிறது.

Also Read: ப்ரின்ஸ் கலக்கலா இல்ல சொதப்பலா? விமர்சனத்தை கூட கேட்க விரும்பாத ரசிகர்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்