தனுசுடன் நடித்தால் மார்க்கெட் போய் விடும்.. இளம் நடிகையை உஷார்ப்படுத்திய சிவகார்த்திகேயன்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது கோலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை பிரபலமாக இருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படத்திலும் தனுஷ் நடித்து முடித்துள்ளார்.

மேலும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் வாத்தி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த இளம் நடிகையை பற்றிதான் தற்போது திரையுலகில் ஒரே பேச்சாக கிடக்கிறது.

தனுஷ் தற்போது அன்புச்செழியன் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். அவருக்கு முன்பாக டாக்டர், டான் திரைப்படங்களின் மூலம் பிரபலமாகி இருக்கும் பிரியங்கா அருள்மோகனிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் அவர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மறுத்துள்ளார். அதன்பிறகுதான் அந்த வாய்ப்பு கீர்த்தி செட்டிக்கு சென்றுள்ளது. தற்போது பிரியங்கா அருள்மோகன், தனுஷுடன் இணைந்து நடிக்க மறுப்பதற்கு பின்னணியில் சிவகார்த்திகேயன் இருப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இரண்டு திரைப்படங்களில் நடித்த பிரியங்காவிடம் அவர் தனுஷுடன் நடித்தால் மார்க்கெட் குறைந்துவிடும் என்று கூறி ஒருசில நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் விஷயங்களை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு வளர்ந்துவரும் நடிகையும் அவருக்கு ஜோடியாக நடிக்க மாட்டார்கள் என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இதற்கு பின்னர்தான் பிரியங்கா இப்படி ஒரு முடிவு எடுத்ததாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையில் ஒரு பனிப்போர் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.