VP மண்டையை கழுவிய SK, யோசிக்காமல் விஜய் செய்த விஷயம்.. அதிருப்தியில் டாப் ஹீரோக்களின் ரசிகர்கள்

GOAT: தளபதி விஜய் நடிப்பில் நேற்று கோட் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. வழக்கமான விஜய் படம் போல தான் கலவையான விமர்சனத்தை இந்த படம் பெற்றிருக்கிறது. விஜய்க்கு இது ஒரு இக்கட்டான காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சினிமாவில் இருக்கும் வரை தன்னுடைய ரசிகர்களை மட்டுமே மலைபோல் நம்பி அடுத்த நகர்வுகளை நகரத்தினார். ஆனால் தற்போது அரசியலில் அவருக்கு எல்லாருடைய தயவும் தேவைப்படுகிறது. கொஞ்சம் பிசகினாலும் அது அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு பிழையாய் அமையும்.

18 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருப்பவர்கள் நம் பக்கம் வரவேண்டும் என்றுதான் விஜய் தன்னுடைய அரசியல் பாலத்தை அமைத்து வருகிறார். கோட் படத்தில் ரஜினி மற்றும் அஜித் ரெபரன்ஸ் வைத்து ஓரளவுக்கு அந்த ரசிகர்களை குளிர வைத்து விட்டார்.

ஆனால் ஒரு சின்ன இடத்தில் அவர் யோசிக்காமல் செய்த விஷயம் தற்போது டாப் ஹீரோக்களின் ரசிகர்களுக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது. ஒரு படத்தில் மற்ற ஹீரோக்கள் கேமியோ ரோலில் வருவது என்பது சாதாரணமாக நடக்கும் விஷயம் தான்.

யோசிக்காமல் விஜய் செய்த விஷயம்

கோட் படத்திலும் அப்படி ஒரு ரோலில் சிவகார்த்திகேயன் வந்தார். அதில் விஜய் இந்த துப்பாக்கியை வச்சுக்கோங்க என்று சிவகார்த்திகேயனிடம் சொல்கிறார். சொல்லிவிட்டு விஜய் போனதும் சிவகார்த்திகேயன் உங்களுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குது போல போங்க.

நான் இங்கே எல்லாத்தையும் பாத்துக்குறேன் அப்படின்னு சொல்றாரு. இந்த வசனத்தை வெங்கட் பிரபு யோசித்து தான் இந்த இடத்தில் வைத்தார் என்று தெரியவில்லை. இதை ரசிகர்கள் விஜய் சினிமாவில் இருந்து போகும்போது தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனுக்கு தருவதாக எடுத்துக் கொண்டார்கள்.

இனி என்னிடத்தில் சிவகார்த்திகேயன் இருப்பார் என விஜய் சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது. அரசியலுக்கு வரும் விஜய் தான் என்ன சொன்னாலும் அது மக்களால் அதிகமாக கவனிக்கப்படும் என்பதை யோசிக்காமல் விட்டு விட்டார்.

வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு சிவகார்த்திகேயன் ஹீரோ என்பதால் அவர் இந்த கேமியோ ரோல் கொடுத்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இப்படி ஒரு ஹெல்ப் ஏத்தி விடுவது தன்னுடைய அடுத்த படத்திற்கு பிசினஸிற்கு நன்றாக இருக்கும் என்பது வெங்கட் பிரபுவுக்கு தெரியும்.

ஏற்கனவே பத்து வருடத்திற்கு முன்பு சிவகார்த்திகேயன் குழந்தைகள் ரசிக்கும் ஹீரோவாகிவிட்டார் என விஜய் சொல்லி இருந்தார். தற்போது இப்படி ஒரு வசனம் கோட் படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

விஜய் சினிமாவை விட்டு போகும் நேரத்தில் அஜித்துக்கு எதிராக சிவகார்த்திகேயனை களம் இறக்குகிறார் என சொல்லும் அளவுக்கு இந்த வசனம் விபரீதத்தை கொடுத்து விட்டது.

- Advertisement -spot_img

Trending News