sivakarthikeyan

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்துக்கான படப்பிடிப்பு வரும் ஆண்டுகளில் நடக்க இருப்பதாக தெரிகிறது.

சீமராஜா படத்தைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை பட இயக்குனரான ரவிக்குமார் மற்றும் இயக்குனர் எம்.ராஜேஷ் அவரது படங்களில் நடித்து வருகிறார். இதில் எம்.ராஜேஷ் அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மற்றொரு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார்.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து இரும்புத்திரை படத்தின் இயக்குனருடன் கைகோர்ப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல்முறையாக சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விக்னேஷ் சிவனின் நெருங்கி நண்பரான அனிருத் அவர்கள் இப்படத்திற்கு இசையமைக்கிறார் மற்றும் லைகா புரொடக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது. விரைவில் இப்படத்தை குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

பெரும் எதிர்பார்த்த சீமராஜாவில் விழுந்தது சாதாரண அடி இல்லை. பல கோடி நஷ்டம். இந்த முறை வெற்றிபெறவில்லை என்றால் பெரிய போராட்டம் எதிர்கொள்ள வேண்டிருக்கும்.

அதிகம் படித்தவை:  ரெமோ படத்திற்கு இயக்குனர் ஷங்கர் செய்த உதவி