Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனுக்கு குடைச்சல் கொடுக்கும் சுந்தர் சி.. டாக்டர் படத்துக்கு வச்ச சரியான ஆப்பு!
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாததால் தற்போது அடுத்ததாக வெளியாக இருக்கும் டாக்டர் படத்தை பெரிதும் நம்பியுள்ளாராம்.
முன்னதாக நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டாக்டர் படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாக போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர்.
தற்போது டாக்டர் படம் ரம்ஜான் விடுமுறைக்கு வெளியாக உள்ளதாம். அதேபோல் அந்த தேதியில் சிம்பு மற்றும் வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் மாநாடு படம் வெளியாகப் போவதாக பரவலாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தற்போது வரை படக்குழுவினர் அதை உறுதி செய்யவில்லை.

doctor-cinemapettai
இது ஒருபுறமிருக்க கமர்ஷியல் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் அரண்மனை 3 திரைப்படம் ரம்ஜானுக்கு வெளியாக உள்ளதாம். இதற்காக பரபரப்பாக வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அரண்மனை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த நேரத்தில் டாக்டர் படத்தை வெளியிடுவது சரியாக இருக்காது என மேற்கொண்டு ரிலீஸ் தேதியை மாற்றலாமா என யோசித்து வருகிறதாம் படக்குழு.

aranmanai-3-cinemapettai
ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து பெரிய ஆட்களை எதிர்த்தால் தான் பெரிய ஆளாக முடியும் என அதே தேதியில் டாக்டர் படத்தை இறக்குவதில் உறுதியாக இருக்கிறாராம். உனக்கு என்னப்பா என்ன வேணாலும் சொல்லுவ, நஷ்டப்படுவது நான்தான என புலம்பும் தயாரிப்பாளரின் மனக்குரல் வெளியில் அப்பட்டமாக கேட்டு வருகிறாராம். தோல்வி படம் கொடுத்து மீண்டுவரும் இந்த நேரத்திலா இப்படி நடக்கும் என சோகத்தில் உள்ளாராம் சிவகார்த்திகேயன்.
