தயாரிப்பாளர் மீது செம கடுப்பில் சிவகார்த்திகேயன்.. நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டாங்க என புலம்பல்

சிவகார்த்திகேயன் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர் அவர் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டதால் அவர் மீது செம கடுப்பில் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஹீரோ. இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரித்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. என்னதான் படக்குழுவினர் படம் சூப்பர்ஹிட் என முட்டுக் கொடுத்தலும் படம் படுதோல்வியை சந்தித்தது அனைவருக்குமே ஓபன் ஆக தெரிந்துவிட்டது.

இந்நிலையில் எப்படியாவது அடுத்த படத்தை ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை கொடுத்த நெல்சன் உடன் கூட்டு சேர்ந்தார். அந்த படத்தை அதே கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தன்னுடைய எஸ் கே புரோடக்சன்ஸ் மூலம் தயாரித்திருந்தார்.

டாக்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் மார்ச் 23 ஆம் தேதி ரிலீஸ் தேதியை முடிவு செய்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக பட ரிலீஸ் தள்ளி சென்றது. இதற்கிடையில் படத்தின் முக்கிய தயாரிப்பாளரான கேஜே ஸ்டுடியோஸ் நிறுவனம் டாக்டர் பட்டத்தை சத்தமில்லாமல் ஓடிடி தளத்திற்கு நல்ல விலை கிடைத்ததால் விற்றுவிட்டாராம்.

இது சம்பந்தமாக சிவகார்த்திகேயன் பல முறை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தும் அதை தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. இந்நிலையில் இருவருக்கும் சண்டை முற்றி விட்டதாக தெரிகிறது.

இதனால் தற்போது சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை பின் தொடர்வதை நிறுத்திவிட்டாராம். இதேபோல்தான் தனுஷின் ஜகமே தந்திரம் படத்திற்கும் பஞ்சாயத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

doctor-cinemapettai
doctor-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்