சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இரு
மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்தவர் பொன்ராம். இவர் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது.

ஆனால் அந்த படம் கைவிடவே, தற்போது இவர் மீண்டும் சிவகார்த்தியனுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளார். ரெமோ, மோகன் ராஜா படங்களை முடித்துவிட்டு இதில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தையும் சிவகார்த்திகேயனின் நண்பர் ராஜா தயாரிக்கவுள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்கும் இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் தீபாவளியில் வெளியாகும் முதல் சிவகார்த்திகேயன் படம் இதுதான்.