Videos | வீடியோக்கள்
சினிமாவிற்கு முன் த்ரிஷாவுடன் விளம்பரத்தில் நடித்த சிவகார்த்திகேயன்.. காட்டுத்தீ போல் பரவும் வீடியோ
காமெடி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரை ரசிப்பதால் இவரது படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே குறும்படம் விளம்பரங்கள் போன்றவற்றில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவற்றை எல்லாம் பெரும்பாலும் ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்நிலையில் த்ரிஷாவுடன் ஒரு சோப்பு விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த காலத்தில் சிவகார்த்திகேயன் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
அதேபோல்தான் திரிஷாவுடன் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் தற்போது தான் அந்த விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் வருகிறார் என்பதே பல ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.
இப்பொழுது இந்த வீடியோ வைரலாகும் என சிவகார்த்திகேயன் அந்த விளம்பரத்தில் நடிக்கும் போது கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
