வெறும் 8 வருடத்தில் சினிமாவால் சிவகார்த்திகேயன் சேர்த்த சொத்து எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா!

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து பின்னர் மெரினா என்ற படத்தின் மூலம் நடிகர் தனுஷை கவர்ந்து அதன் பிறகு எதிர்நீச்சல் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்(sivakarthikeyan ).

பின்னர் தொடர்ந்து தனுஷ் சில படங்களை தயாரிக்க ஓரளவு வசூல் செய்யும் நாயகனாக உயர்ந்தார். அதிலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் வசூல் ரீதியாக இவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

இவ்வளவு ஏன் அந்த காலகட்டங்களில் தனுஷை விட அதிக வசூல் செய்யும் நாயகனாக மாறினார் என்பதுதான் உண்மை. அதன்பிறகு தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு வெளி தயாரிப்புகளில் நடிக்க ஆரம்பித்தாராம்.

அதிலும் சிவகார்த்திகேயனின் மேனேஜராக அறியப்படும் ஆர் டி ராஜா தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ரெமோ, வேலைக்காரன், சீமராஜா போன்ற பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்தார். இதில் வேலைக்காரன் திரைப்படம் சிவகார்த்திகேயன் நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு வசூல் செய்தது. ஆனால் தற்போது வரை அது ஒரு தோல்விப் படமாகவே ரசிகர்கள் மத்தியில் கருதப்படுகிறது.

லட்சங்களில் ஆரம்பித்த சிவகார்த்திகேயன் தற்போது ஒரு படத்திற்கு 22 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அதிலும் தனக்கு யார் சம்பளத்தை சரியாக தருவார்கள் என்பதை உணர்ந்து அந்த தயாரிப்பாளர்களுக்கு மட்டும் பட வாய்ப்பு கொடுத்து வருகிறார். அப்படி சம்பள விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால் சொந்த தயாரிப்பில் படமெடுக்கிறார்.

இப்படி சினிமாவுக்கு வந்த கடந்த எட்டு வருடத்தில் மட்டும் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு 150 முதல் 175 கோடியாக உயர்ந்து விட்டதாம். டாக்டர் படத்திற்கு பிறகு சம்பளத்தை ஏற்றலாம் எனவும் முடிவு செய்துள்ளதாக சிவகார்த்திகேயன் வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன. ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்றோர் வரிசையில் அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு மக்கள் கூட்டம் வருவதாக தியேட்டர் வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த சில வருடங்களில் சிவகார்த்திகேயன் போல் சினிமாவில் அதிக அளவு பிரச்சனையை சந்தித்த நடிகர்களே கிடையாது. அதையெல்லாம் மீறி சிவகார்த்திகேயன் இந்த உயரத்திற்கு வளர்ந்திருப்பது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்று தான்.

sivakarthikeyan-cinemapettai-01
sivakarthikeyan-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்