புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய் பட இயக்குனருடன் சிவகார்த்திகேயன்.. அடுத்தடுத்த படங்களை அடுக்கும் எஸ்கே

Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் சமீபத்திய ரிலீசான அமரன் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மேலும் சூர்யாவின் இயக்குனரான சுதா கொங்கராவுடன் உடனும் ஒரு படம் இருக்கிறது.

இந்நிலையில் அடுத்த விஜய், சிவகார்த்திகேயன் தான் என்று கோலிவுட்டில் பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. அதன்படி கோட் படத்திலும் தனது துப்பாக்கியை விஜய் சிவகார்த்திகேயனிடம் கொடுத்துவிட்டு செல்வார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் வளர்ச்சியும் சினிமாவில் அதிகமாகி தான் இருக்கிறது.

அமரன் பட வெற்றியால் கண்டிப்பாக அவரின் சம்பளம் பல மடங்கு உயர வாய்ப்பு இருக்கிறது. அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் என்று சொல்லி வரும் நிலையில் விஜய் பட இயக்குனருடன் கூட்டணி போட இருக்கிறார். அதாவது விஜய்யின் கடைசி படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார்.

விஜய் பட இயக்குனருடன் கூட்டணி போடும் சிவகார்த்திகேயன்

தளபதி 69 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. விஜய்யின் கடைசி படம் இது என்பதால் ஒட்டுமொத்த சினிமாவின் எதிர்பார்ப்பும் தளபதி 69 படத்தின் மீது உள்ளது. இந்த சூழலில் அடுத்ததாக லலித் தயாரிப்பில் தனுஷ் வினோத் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனிடம் ஒன்லைன் ஸ்டோரி ஒன்று வினோத் கூறி உள்ளாராம். அந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். ஆகையால் அடுத்த வருடம் இந்த படம் தொடங்குவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது.

விஜய், சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் படங்களை இயக்கிய இயக்குனர்களை அடுத்தடுத்து லாக் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் ஏஆர் முருகதாஸ், சுதா கொங்கரா இப்போது வினோத் என அடுத்தடுத்த படங்கள் மாஸ் இயக்குனர்களுடன் வர இருக்கிறது.

- Advertisement -

Trending News