நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.எல். விஜய் இயக்கும் ஹாரர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.

அதிகம் படித்தவை:  கொடுமைப் படுத்துவதாக போலீஸில் புகார் அளித்த மனைவி- ஆனால் பாலாஜி என்ன சொல்றாரு பாருங்க

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் தேவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் சிவகார்த்திகேயனின் ரெமோ படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.