எல்லாத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கும் பிடிச்ச நடிகை நம்ம சமந்தாதாங்க. ஏன்னா சரியான நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்க்கு வருவது, கால்சீட் குளறுபடி பண்ணாமல் நடிப்பது இப்படி எல்லாத்துலையும் சமந்தா பர்பெக்ட்.

சமந்தாவுக்கு நாக சைத்தன்யாவோட திருமணம் விரைவில் நடக்க இருப்பதால் கையில் இருக்கும் அரை டஜன் படங்களையும் பம்பரமாக சுற்றி நடித்து வருகிறார். கல்யாணத்துக்கு பிறகும் நடிப்பேன்னு வேற சொல்லிருக்காங்க…

இப்போ என்ன பிரச்சனைனா சமந்தாவுக்கு முன்ன இருந்த அந்த தோல் பிரச்சனை திரும்பவும் வந்துருச்சாம்க.

இதன் காரணமா திரும்ப சமந்தா தோல் நோய் சிகிச்சை எடுத்துக்குறாங்க…
இப்போ பல படங்கள்ல நடிக்கும் காரணத்தினால சருமம் பாதிக்கப்படுமோனு கவலைபடுறாங்க…கல்யாண பொண்ணாச்சே கவலை இருக்கத்தானே செய்யும்.

Sivakarthikeyan-Samantha-Nagachaitanyaஇந்த சூழ்நிலைல சமந்தா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா இயக்குனர் பொன்ராம் இயக்கத்துல ஒரு படம் நடிக்கிறாங்க. இந்த படத்தோட ஷூட்டிங் வெயில்ல நடக்குறதால என்னால வெயில்ல நடிக்க முடியாதுன்னு கண்டிஷன் போடுறாங்களாம். அப்படி நான் நடிக்கணும்னா நான் இருக்கும் இடத்தை சுத்தி திரை போடுங்கனு அடம் பிடிக்குறாங்களாம்.

படப்பிடிப்பு அடிக்கடி சமந்தாவால தாமதமாகுதாம்…. இதனால இயக்குனர் மட்டும் இல்லாமல் ஹீரோ சிவகார்த்திகேயனும் தினம் தினம் ஷூட்டிங் ஸ்பாட்ல டென்ஷன் ஆகுராராம்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அரிப்பு, சொறி, படை எல்லாத்துக்கும்தான் நம்ம சிவராஜ் சித்த வைத்தியர் இருக்காரே. அப்புறம் என்ன சமந்தா?