Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகரை குறிவைத்து அடிக்கும் சிவகார்த்திகேயன்.. இந்த முறையாவது தப்புவாரா..
குறிவைத்து அடிக்கும் சிவகார்த்திகேயன்
கனா படத்தின் ரிலீசாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம் என்றும் இதில் சிவகார்த்திகேயன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் என்ற படத்தில் நடித்தார் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் இப்பொழுது நாமே வளர்த்த கடா மார்பில் முட்டுவது போல் சிவகார்த்திகேயனும் தனுசும் மோதுகின்றனர். தனுஷ் நடித்து வெளிவரவிருக்கும் மாரி-2 படத்தின் டிரைலர் இன்று வெளிவர உள்ளது. இந்த இரு படங்கள் மட்டுமல்லாமல் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி சீதக்காதி படமும் வெளிவர உள்ளது என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இதனை அதிகாரபூர்வமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆதிமூலம் என்ற கேரக்டரை மையப்படுத்தி உள்ளது. இந்த மூன்று படங்களுமே வேறு வேறு கோணத்தில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் தீபாவளி என்றால் அது தல தளபதி படங்களாக இருக்கும். ஆனால் இப்போது அடுத்த வரிசையில் உள்ள தனுஷ், சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட திரைப்படங்களை பார்த்து குடும்பத்துடன் கொண்டாடுவோம். இது கண்டிப்பாக புத்தாண்டுக்கான ஒரு தொடக்கம் என்றே கூறலாம்.
