தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்பிறகு டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை மார்ச் 25ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் எப்போதும் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி கவனமான முறையில் கதைகளைத் தேர்வு செய்வது, தயாரிப்பாளர்களை தேர்வு செய்வது என தனது வித்தையை கையாண்டு வருகிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் அனைத்துமே காமெடி கதைகளை மையமாகக் கொண்டு இருக்கும், இதனால் பலரும் சிவகார்த்திகேயனுக்கு காமெடி கதாபாத்திரம் தான் சரியாக இருக்கும் என கூறி வந்தனர்.
முதலில் அதனை ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயன் பின்பு மற்ற நடிகர்களை போல ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க ஆசைப்பட்டார். மேலும் எனக்கு எல்லாம் நடிப்பு வரும் என கூறி ஒரு சில வித்தியாசமான கதாபாத்திரங்களை நடித்து வந்தார். இவர் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய வேலைக்காரன் மற்றும் சீமராஜா போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
அதனால் மீண்டும் சிவகார்த்திகேயன் காமெடி கதைகளில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் புதுமுக இயக்குனர்கள் பலர் வித்தியாசமான கதாபாத்திரங்களை சிவகார்த்திகேயனிடம் கூறிவருகின்றனர். ஆனால் இப்படத்தினை தயாரிப்பதற்கு எந்த தயாரிப்பாளரும் முன்வருவதில்லை.
காரணம் சிவகார்த்திகேயன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் எந்த படங்களும் வெற்றி பெறுவதில்லை என்பதால் தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயனை வைத்து வித்தியாசமான கதைகளை தயாரிப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இவ்வளவு ஏன் சிவகார்த்திகேயன் கூட அவரது தயாரிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே காமெடி கதைகளை வைத்து தான் இருக்கும். சமீபத்தில் வெளியாக உள்ள டான் படமும் ஒரு காமெடி கதையை உருவான படம்தான்.
ஆனால் கமலஹாசன் பொருத்தவரை படத்தின் வெற்றி, வசூல் எதிர்பார்ப்பதே கிடையாது படத்தினுடைய கதையம்சமும் படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரம் மட்டும்தான் அவர் கருத்தில் வைத்துக் கொள்வார். விவரமான சிவகார்த்திகேயன் கமல்ஹாசனிடம் படத்தின் கதையைக் கூறி சம்மதம் வாங்கி உள்ளார்.
கமல்ஹாசனும் சிவகார்த்திகேயன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தால் படம் வெற்றி பெறுமா என்பது கூட யோசிக்காமல் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு படம் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் கவலை இல்லை காரணம் இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கவில்லை. ஆனால் கமல்ஹாசன் கண்டிப்பாக படம் வசூல் பெரும் எனக் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.