புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கோட் படத்திற்கு பிறகு நடந்த பெரிய ஸ்கேம்.. திக்கி திணறும் சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan: மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாத நிலைமை என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது இருக்கிறார். நடிகர் விஜய் நடித்த கோட் படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோல் பண்ணியதால் இந்த அளவுக்கு பின் விளைவுகள் வரும் என அவர் எதிர்பார்க்கவே இல்லை.

ஏன் விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வில்லன் மோகனை சமாளிப்பதற்கு சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்துவிட்டு ஜூனியர் விஜய்யை தேடி, காந்தி கேரக்டரில் இருக்கும் விஜய் போவார். அத்தோடு படத்தின் கிளைமாக்ஸ் முடியும்.

படம் ரிலீஸ் ஆன பிறகு சில கூட்டம் விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்ததை தன்னுடைய சினிமா கேரியரையே அடுத்து சிவகார்த்திகேயன் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது போல் திரித்து விட்டு விட்டார்கள்.

திக்கி திணறும் சிவகார்த்திகேயன்!

அதன் பின்னர் சிவகார்த்திகேயன் எங்கே போனாலும் துப்பாக்கி கணம் எப்படி இருக்குன்னு அசால்டாக கேள்வி கேட்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெற்றி பெற்றதற்கு அந்த துப்பாக்கி தான் காரணம் என்பது போல் சில சோசியல் மீடியா பக்கத்தில் செய்தியும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் இதை மறுக்கும் நிலைமையில் இல்லை. காரணம் திடீரென தன் பக்கம் இந்த கும்பல் கிளம்பி இஷ்டத்திற்கு எதையாவது பேச ஆரம்பித்து விடுவார்கள் என்பதால் தான். சிவகார்த்திகேயனின் நிலையை பார்த்தாலும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

SK
SK

அவர் என்னவோ கடின உழைப்பால் முன்னேறி வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய வெற்றி அவ்வப்போது சிலரது பங்களிப்பால் கிடைக்கிறது என செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. முதலில் விஜய் டிவியால் இந்த வெற்றியைப் பெற்றார் என ஆரம்பித்து, அதன் பின்னர் தனுஷால் பட வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லி, தற்போது விஜய்யின் ஆதரவில் இருப்பது போல் சித்தரிக்கப்படுகிறது.

- Advertisement -

Trending News