அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து ஜெட் வேகத்தில் முன்னணி இடத்துக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். தனது ப்ளஸ் பாய்ண்டே வார்த்தை ஜாலம்தான் என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்ற கலகலப்பான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும், காக்கி சட்டைக்கு பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம் பொன்ராம் இயக்கத்தில் அவர் நடித்த ரஜினிமுருகன் திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் திரைக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்தார் சிவகார்த்திகேயன். அதனால் அந்த படம் அவருக்கு வேகத்தடையாக அமைந்தது. இருப்பினும் தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் மீண்டும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

அதோடு பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து சில படங்களில் நடிக்கவும் கதை கேட்டிருப்பவர், இந்த படங்களை தனது சொந்த பேனரிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். மற்றவர்களை நம்பி களமிறங்கி குறித்த நேரத்தில் படங்கள் ரிலீசாகாவிட்டால் மார்க்கெட் பாதிக்கும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.