Tamil Cinema News | சினிமா செய்திகள்
உன் உறவே வேணாம்! சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு.
தமிழ் சினிமாவில் வெற்றி கூட்டணியாக அமைந்த சிவகார்த்திகேயன் – அனிருத் கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டு இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷுடன் காமெடி ரோலில் நடித்தவர் சிவகார்த்திகேயன். அவரை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நாயகனாக தனுஷ் எதிர் நீச்சல் படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்படம் முதல் கடைசியாக வேலைக்காரன் படம் வரை சிவகார்த்திகேயனின் பல படத்தின் ஒரே இசையமைப்பாளர் அனிருத் தான். இவர்கள் கூட்டணியும் கோலிவுட்டில் பிரபலமாக பேசப்பட்டது. தொடர்ந்து, அனிருத்தும், தனுஷும் பிரிந்தாலும், இவர்கள் கூட்டணி மட்டும் வலுவாகவே சென்று கொண்டு இருந்தது. சமீபத்தில் நடைபெற்ற, வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட அனிருத் இல்லனா சிவகார்த்திகேயன் இல்லனு, பலரும் சொல்றாங்க. அது உண்மை தான் என சிவகார்த்திகேயன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இப்படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில், அனிருத் தான் இசையமைப்பார் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில், விவேக் – மெர்வின் இசையமைப்பாளர்களாக கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. நல்ல நட்புடன் இருக்கும் இவர்கள் கூட்டணியில் திடீரென இந்த விரிசல் ஏற்பட்டதன் காரணம் தெரியாமல் நெட்டிசன்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ஆனால், அடுத்து இசையமைப்பாளர் அனிருத் ரஜினிகாந்த் – கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இதன் பணிகளே, ஒரு வருடம் நெருக்கி இருக்கும் என்பதால் இப்படத்தை ஒப்புக்கொள்ளவில்லை என அவரது நெருங்கிய தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருந்தும், இருதரப்பில் இருந்து காரணம் வரும் வரை இப்படி எதும் சொல்லி தேத்திக்கொள்ள வேண்டிதான்.
