புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

சிவகார்த்திகேயனை இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் விஜய், VP.. சைமா விருது வழங்கும் விழாவில் ஏற்பட்ட தர்ம சங்கடம்

Sivakarthikeyan: இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கிறது என்று சொல்லுவாங்க. அதை தான் இப்போ கோழி உடலில் செஞ்சிருக்காங்க தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு. சும்மா இருந்த சிவகார்த்திகேயனை சொறிஞ்சி விட்டு, தர்மசங்கடமான நிலைமைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள்.

கோட் படம் ரிலீசான போது அந்த படத்தை பற்றி அதிகமாக பேசியதோடு அதில் வந்த சிவகார்த்திகேயன் காட்சியை ரொம்பவும் அதிகமாக பேசினார்கள். துப்பாக்கியை பிடிங்க சிவா என்று விஜய் சொல்வதும், நீங்க போங்க இங்க நான் பாத்துக்குறேன்னு சிவகார்த்திகேயன் சொல்றதும் அடடா என்ன பிரமாதம்.

சைமா விருது வழங்கும் விழாவில் ஏற்பட்ட தர்ம சங்கடம்

இந்த காட்சி வைக்கும் போது தனக்கு பெரிய தர்ம சங்கடமான சூழ்நிலை இதனால் ஏற்பட போகிறது என்று சிவகார்த்திகேயனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்னது சிவகார்த்திகேயன் அடுத்த தளபதியா என்று ஒரு கூட்டம் பொங்கி எழுந்து சும்மா இருந்த சிவகார்த்திகேயனை பந்தாடி விட்டார்கள்.

சரி படத்தின் வரவேற்பு கொஞ்சம் கம்மியானதும் இந்த பேச்செல்லாம் ஆறப்போட்டு விடுவார்கள் என சிவகார்த்திகேயன் இணைத்து இருந்தார். அதுதான் இல்லை இந்த ஒரு காட்சி அவரை சைமா விருது வழங்கும் விழா மேடை வரை வச்சு செஞ்சது.

சமீபத்தில் நடந்த சைமா விருது நிகழ்ச்சியின் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். விருது வாங்குவதற்காக மேடை ஏறிய சிவகார்த்திகேயனை கூட்டத்தில் இருந்த சிலர் துப்பாக்கி கணம் எப்படி இருக்குது சிவா என்று கத்தி கேட்கிறார்கள்.

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சிவகார்த்திகேயன் சைகை மூலமாக சமாளிக்கிறார். அந்த இடத்தில் அவர் ரொம்பவே தர்மசங்கடமாக நிற்பது பார்க்கும்போதே நன்றாக தெரிகிறது. சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகர் தான், அவருடைய கடின உழைப்பு கண்டிப்பாக அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை கொடுக்கும்.

அப்போது ரசிகர்கள் அவரைக் கொண்டாட காத்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கேப்பில் கிடா வெட்டி, இப்போ அவர் உண்மையா ஜெயிச்சாலும் ஏத்துக்க மாட்டோம் என்று சொல்ற அளவுக்கு ஒரு கூட்டம் தயாராகி கொண்டு இருக்கிறது.

500 கோடியை நெருங்காத கோட் வசூல்

- Advertisement -spot_img

Trending News