செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

SK கூட நடிக்கணுமா, டாட்டா காட்டிய டாப் செலிபிரிட்டிகள்.. புது கூட்டணியுடன் புறநானூறு டெஸ்ட் சூட்!

Sivakarthikeyan: சூர்யா படம் என்றதும் டக்கென்று தலையாட்டிய டாப் செலிபிரிட்டிகள் சிலர், தற்போது புறநானூறு படத்தில் இருந்து ஜகா வாங்கி இருக்கிறார்கள். இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற டாப் ஹிட் படங்களை கொடுத்த சுதா கொங்கரா அடுத்து புறநானூறு படத்தை இயக்க இருக்கிறார் என அறிவிப்பு வெளியானது.

அதுவும் சூர்யா மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணியுடன் என்றதும் ரசிகர்கள் அந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தார்கள். படத்தின் அறிவிப்பு வெளியான நேரத்துக்கு இந்நேரம் படம் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். ஆனால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்தார்.

இதற்குக் காரணமாக நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டது. முதலில் சூர்யா படம் என்றதும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா, மலையாள திரை உலகின் டாப் செலிபிரிட்டிகளான நஸ்ரியா மற்றும் காளிதாஸ் ஜெயராம் இந்த படத்தில் நடிக்க இருந்தார்கள்.

புது கூட்டணியுடன் புறநானூறு டெஸ்ட் சூட்!

அதுவும் நையாண்டி படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து இந்த படத்தின் மூலம் நஸ்ரியா தமிழ் சினிமாவுக்கு என்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. நாங்க சூர்யா நடிக்கிறதால தான் ஓகே சொன்னோம், சிவகார்த்திகேயன் கூட எப்படி நடிக்கிறது என்று யோசித்தாங்களே என்னவோ ஒவ்வொருவரும் படத்திலிருந்து விலகி இருக்கிறார்கள்.

தற்போது புதிய டீமுடன் புறநானூறு படம் டெஸ்ட் சூட்டிங் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே வெளியான செய்திகளின் படி சிவகார்த்திகேயன் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். காளிதாஸ் ஜெயராம் கேரக்டரில் நடிகர் அதர்வா நடிக்கிறார். அதே மாதிரி விஜய் வர்மா கேரக்டரில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். மேலும் நஸ்ரியா கேரக்டரில் நடிகை ஸ்ரீ லீலா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Trending News