sivakarthikeyan

வேலைக்காரன் படத்தில் பணிபுரிந்தவர்களை கவுரவிக்கும் விதமாக  நேற்று (வெள்ளிக்கிழமை) வேலைக்காரன் ஃபேர்வெல் டே கொண்டாடப் பட்டது.

வேலைக்காரன்

தனி ஒருவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் வேலைக்காரன் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள நடிகர் பகத் ஃபாஸில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  வருத்தத்தில் சிம்பு ரசிகர்கள்
Nayanthara, Sivakarthikeyan in Velaikaran

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை தொடர்ந்து, 24AM ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனால் திட்டமிட்டபடி டிசம்பரில் வேலைக்காரன் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வேலைக்காரனில் பணிபுரிந்தவர்களை கவுரவிக்கும் விதமாக வேலைக்காரன் ஃபேர்வெல் டே கொண்டாடப்பட்டது.

பேசிய சிவகர்த்திகேயன்

அப்பொழுது 24AM நிறுவனத்தை பற்றி  பேசிய சிவகர்த்திகேயன் ‘நான் ரூ 50 லட்சம் பட்ஜெட்டிலிருந்து தற்பொழுது  பல கோடி வரை பட்ஜெட் போட்டு எடுக்கும் படங்களில் நடிக்கின்றேன். இவை அனைத்திற்குமே நீங்களும் ஒரு காரணம், உங்களின் ஆதரவு தான் இங்கு வரை வரவைத்தது’ என நெகிழ்ச்சியாக பேசினார்.

அதிகம் படித்தவை:  அஜித் படத்தை இயக்கும் கபாலி ரஞ்சித் ????

ஹாப்பி பர்த்டே நயன்தாரா

இந்நிலையில் நேற்று நடந்த வேலைக்காரன் பிரிவு விழாவில் நயன்தாராவுக்கு சர்ப்ரைஸாக பிறந்த நாள் கொண்டாடி அசத்தினார் படம் டீம். இதோ அந்த கொண்டாட்ட போட்டோ.

Nayanthara , Actor Sathish Sivakarthikeyan & Mohan Raja
Nayanthara Sivakarthikeyan & Mohan Raja
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

புதுசு புதுசா விழா கொண்டாடுறாங்களே. என்னமோ படம் ஹிட் ஆனா சரி.