துல்கர் சல்மானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இவ்வளவு ஒற்றுமையா.? இது தெரியாம போச்சே!

சிவகார்த்திகேயன் – துல்கர் சல்மான், திரை பயணம் வேறு வேறு பாதையில் இருந்தாலும் இவர்களுக்கு இடையே இயற்கையாக சில ஒற்றுமைகள் அமைந்து இருக்கிறது. அப்படி என்ன ஒற்றுமைகள் என்றால், சிவகார்த்தியகேயன் திரை உலகிற்குள் கதாநாயகனாக அறிமுகமாகி நேற்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த சாதனையை அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

மலையாளத்தில் கனவு நாயகனாக வலம் வரும் துல்கர் சல்மான் கதாநாயகனாக அறிமுகமான செகண்ட் ஷோ படமும் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகமாகி 2012ல் வெளியான மெரினா திரைப்படமும் பிப்ரவரி 3 ஆம் தேதியில் தான் வெளியானது.

ஒரே நாளில் அறிமுகமான இந்த இரண்டு ஹீரோக்களுக்கும் இது மட்டும்தான் ஒற்றுமையா என்றால், இவர்களின் படங்களில் முதன் முதலாக 100 கோடி வசூல் என்ற சாதனை செய்த படங்களாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும், துல்கரின் குருப் படமும் இருக்கிறது. இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற நான்கு மொழிகளில் வெளியானவை.

அதுமட்டுமில்லாமல், இருவரும் படம் நடிப்பதோடு மட்டுமல்லாமல், படத்தயாரிப்பிலும் தொடர்ந்து வெற்றி கண்டு வருகின்றனர். சிவகார்த்திகேயன் எஸ்.கே.ப்ரொடக்சன் என்ற பெயரிலும், துல்கர் WAYFARER FILMS என்ற பெயரிலும் தங்களின் படத்தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் உதவிய தனுஷ் மறந்து தனது அறிக்கையை வெளியிட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது 3 படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பார்த்துதான் தனுஷ் உன்னிடம் திறமை இருக்கிறது நீ ஹீரோவாக நடிக்கலாம் எனக் கூறியதாக சிவகார்த்திகேயனை கூறினார்.

மேலும் நல்ல கதையை வந்தால் உனக்கு சொல்கிறேன் எனக்கூறி எதிர்நீச்சல் கதையை கேட்டு சிவகார்த்திகேயனை அக்கதையில் நடிக்க வைத்தார். மேலும் அப்போது சிவகார்த்திகேயன் பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் அவரது படத்திற்கு ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்

அப்போது தனுஷ் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தார். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் சிவகார்த்திகேயனுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இந்த படம் வெற்றி அடைவதற்கு தனுஷின் பாடலும் ஒரு காரணமாக அமைந்தது.

ஆனால்  சமீபத்தில் சிவகார்த்திகேயன் பத்தாண்டு நிறைவு பெற்றதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பாண்டிராஜ் உட்பட படத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் முக்கியமாக உதவி செய்த தனுஷை மறந்து அறிக்கை வெளியிட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தற்போது பல ரசிகர்களும் சிவகார்த்திகேயன் நன்றி மறந்த செயல்படுவதாக கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்