சிவகார்த்திகேயன் தன் கையில் இப்போது அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார்.தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் நடித்த வருகிறார்.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் பஸ்ட் லுக் வரும் ஜுன் 9ம் தேதியும், படத்தின் பாடல்கள் ஜுன் மாத இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஜுன் மாதமே படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியானாலும், படத்தை இரண்டு மாதம் கழித்து செப்டம்பர் 9ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் செப்டம்பரில் தான் வெளியாகி ஹிட் அடித்ததாம்.

எனவே ரெமோ படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யலாம் என்று சொல்லிவிட்டாராம் சிவகார்த்திகேயன்.

செப்டம்பர் சென்டிமென்ட் ரெமோ படத்தில் கைகொடுக்குமா?