Tamil Cinema News | சினிமா செய்திகள்
சீமராஜாவிற்கு வந்த சோதனை! வசூலில் தப்புவாரா சிவகார்த்திகேயன்?
ஒரு படம் லாபம் சம்பாதிக்க மூணு வழி இருக்கு. ஒண்ணு அந்த படம் நல்லா இருக்கணும் நல்லா இருந்தால் எப்படிப்பட்ட படம் வந்தாலும் ஓடும். இரண்டாவது படத்துக்கு promotions ஒழுங்கா பண்ணால் அதை வச்சு ஓரளவுக்கு வசூல் செய்யலாம். மூன்றாவது ஒரு படம் சர்ச்சையை கிளப்பி அதிலிருந்து ஓரளவுக்கு கலெக்ஷன் கொண்டு வரும். இதுல சீமராஜா எந்த இடம்.

Seema-Raja
இதுவரை ரசிகர்கள் கூட்டத்தால் ஓரளவு வசூல் வந்திருக்கலாம் ஆனால் இனிமேல் வரக்கூடிய வசூல்தான் எல்லாவற்றையும் முடிவு பண்ணும் வெற்றியா? இல்லையா? என்று தெரிய வரும். முதல் ஷோவில் படம் பார்த்த அனைவரும் சூப்பர் என்று சொன்னார்கள், இரண்டாவது ஷோவில் படம் பார்த்தவர்கள் சுமார் என்று சொன்னார்கள், மூன்றாவது ஷோவில் ரசிகர்கள் கூறுவது படம் மொக்கை. இதில் எதை நம்புவது? இனி வரும் நாட்களில்தான் வசூலையும் லாபத்தையும் பார்த்து படம் வெற்றியா தோல்வியா என்பதை முடிவு செய்வார்கள்.
சென்னையில் கடந்த நான்கு நாட்களில் சிவகர்த்திகேயனின் சீமாராஜா செய்த வசூல் 4 கோடி. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 26 கோடி வசூல் செய்துள்ளது ஆனால் எதிர்பார்க்கப்பட்டது 30 கோடி. இன்று வரும் வசூலை பார்த்தால் ஓரளவுக்கு கணித்து விடலாம் சீமராஜா வெற்றியா தோல்வியா என்று?
