Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-sk-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நாலு காசு பார்த்தா நீ பெரிய பு****? ஆணவத்தில் ஆடாதே.. சிவகார்த்திகேயனை கேவலமாக திட்டிய சூர்யா ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பெரிய ரசிகர் பட்டாளங்களை வைத்திருப்பவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் சூர்யாவின் பிறந்த நாள் அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடி முடிக்கப்பட்டது.

சூர்யாவின் பிறந்த நாளுக்கு விளையாட்டு வீரர்கள் முதல் இந்திய சினிமா நட்சத்திரங்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். சூர்யாவுக்கு தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் பெரிய அளவு ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தொலைக்காட்சியில் இருந்து தற்போது சினிமாவில் கமர்ஷியல் நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். 2k கிட்ஸ் நாயகனாக தமிழ் சினிமாவில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷின் பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்திருந்தார். சிவகார்த்திகேயன் இந்த அளவுக்கு வளர்வதற்கு தனுஷ் தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட சிவகார்த்திகேயன் சூர்யாவுக்கு மட்டும் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்பது தெரியவில்லை. சூர்யா ரசிகர்கள் இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தபடி சிவகார்த்திகேயனை கண்டபடி பேசி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் ஹீரோ ஆனதில் அவரைவிட சூர்யா மிகவும் சந்தோஷப்பட்டார் என்பது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் போது அவரது முகத்தில் தெரிந்த சந்தோஷமே வெளியிட்டது.

அப்படியிருக்கும்போது சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாதது அவரது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. ஆணவத்தில் ஆடக் கூடாது எனவும், ஒரு சில படங்கள் பிளாப் ஆனால் நீயும் நடுரோட்டுக்கு தான் வந்தாக வேண்டும் எனவும் ஒருமையில் பேசி வருகின்றனர்.

sk scolded by suriya fans

sk scolded by suriya fans

பாவம் சிவகார்த்திகேயன், விடுங்கப்பா!

Continue Reading
To Top