சின்னத் திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து, முன்னணி நடிகராக உயர்ந்து இருப்பவர் சிவகார்த்திகேயன். சினிமாவுக்கு வந்து 5 வருடம் நிறைவடைந்ததையொட்டி அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவர் இப்படி கூறியுள்ளார்…

‘2012 பிப்ரவரி 3-ந் தேதி பெரிய திரையில் என்னைப் பார்த்தேன். பல அனுபவங்களுடன் இந்த 5 வருடம் அற்புதமாக கடந்திருக்கிறது. நீங்கள் கொடுத்த இப்படி ஒரு வாழ்க்கையை கனவிலும் நினைத்துப் பார்த்தது இல்லை. என்னுடைய சகோதரர்கள், சகோதரிகள், என்னுடைய அனைத்து படக்குழுவினர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், அனைத்து நட்சத்திரங்கள், ஊடகங்கள், ரசிகர்கள் எனக்கு அன்பும், ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

இந்த பயணத்தை தொடங்கி வைத்த பாண்டிராஜ் சாருக்கு சிறப்பு நன்றி. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எப்போதும் கற்றுக் கொள்வேன். பொழுது போக்கான படங்களை கொடுக்க என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வேன். மீண்டும் ஒரு நன்றி. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்’.