Tamil Cinema News | சினிமா செய்திகள்
அக்ரிமெண்டால் லட்சத்தில் இருந்து கோடியான சிவகார்த்திகேயனின் சம்பளம்..
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க இருக்கும் ஸ்டுடியோ க்ரீன் படத்தில் அவரின் சம்பளம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியின் முக்கியமான தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். அவருக்கு அப்போது வெறும் ஆயிரங்களில் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து கோலிவுட்டில் நாயகனாக அறிமுகமானார். டிவியில் இருந்து சினிமாவுக்கு வரும் யாரும் பெரிதாக சோபிக்கமாட்டார்கள் என ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. அதை சிவகார்த்திகேயனின் ஏற்றம் உடைத்தது. இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக மாறி இருக்கிறார். தொடர்ந்து பல வெற்றி படங்களையும் கொடுத்து கொண்டு இருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய வேலைக்காரன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மோகன் ராஜா இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முதல்முறையாக சிவாவுடன் ஜோடி சேர்ந்தார். ஜங்க் உணவுகள் இந்திய சந்தையை ஆக்கிரமித்தது குறித்தும் அவர்களின் பொருளில் உள்ள நச்சுத்தன்மை குறித்தும் படத்தில் விவரமாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. படத்தை பார்த்த சாமானியனுக்கு இத்தனை பிரச்சனை இருக்கா என யோசிக்கும் அளவுக்கு படம் கொஞ்சம் பதறத்தான் அடித்தது. இப்படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பிரம்மாண்ட படைப்பாக இப்படம் உருவாக இருக்கிறது.
இதை தொடர்ந்து, இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் சமீபத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு சிவகார்த்திகேயனுக்கு ரூ. 8 கோடி சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இப்படம் குறித்த ஒரு சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது. சிவா நடிக்க வந்த புதிதில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒரு படம் செய்ய அக்ரிமெண்ட் போடப்பட்டதாம். சிவாவின் சம்பளமும் ரூ. 80 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், படம் பாதியிலேயே நின்று விட்டது. அக்ரிமெண்ட் பத்திரத்தை வைத்து பஞ்சாயத்து செய்யப்பட்டதை அடுத்து சிவா ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால், சம்பளமாக ரூ 15 லட்சம் கேட்டு இருக்கிறார். அப்படி இப்படி என பேச்சுகள் நடத்தப்பட்டு தற்போது 8 கோடி தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
