‘ரஜினிமுருகன்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை அடுத்து மாஸ் ஹீரோக்களின் பட்டியலில் இணைந்த சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ‘ரெமோ’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ‘ரெமோ’ படத்தின் டீசர் வெளியான பின்னர் இந்த படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு உச்சத்திற்கு எகிறியுள்ளது.

அதிகம் படித்தவை:  சீமராஜா திரைவிமர்சனம்.!

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையின் வியாபாரத்தில் மட்டுமே ரூ.32 கோடி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகை பிற மாஸ் தமிழ் நடிகர்களின் படங்களுக்கு கிட்டத்தட்ட இணையாக கருதப்படுகிறது.

அதிகம் படித்தவை:  சிவகார்த்திக்கேயன் தவறவிட்ட தேசிய விருதுவாங்கிய படம்.! இதில் மட்டும் நடித்திருந்தால் சிவா ரேஞ்சே தனி

சிவகார்த்திகேயன் படம் என்றாலே குழந்தைகளுடன் குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற கருத்து நிலவி வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் உரிமை போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் ஆகியுள்ளது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் பல மாஸ் ஹீரோக்கள் உள்ள நிலையில் அவர்களுடன் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளது வரவேற்கத்தக்கதாக கருதப்படுகிறது.