சில பல வருடங்கலாகவே, கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க பலர் முயற்சி எடுத்தும் முடியவில்லை. கார்த்திக்கிடம்  இதை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட பொழுது ‘இதுவரை சரியான கதையாக எதுவும் அமையவில்லை’ என்றே பதில் கூறினார்.

தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை எடுத்த இயக்குனர் திருவின் அடுத்த பட அறிவிப்பு வந்தது. இப்படத்தில் கார்த்திக், மற்றும் கௌதம் நடிக்க இருப்பதாக அவர் உறுதி செய்தார்.

‘கவுதம், திருவின் இந்த ஸ்கிரிப்ட் கேளுங்கள் என்றார் கௌதம். கதை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. நான் சில காலமாக கேட்ட கதைகளிலேயே மிகவும் அருமையான ஸ்கிரிப்ட் இது தான்.’என்று கூறினார் கார்த்திக்.

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இணையத்தில் ரசிகர்களுக்கு போட்டியும் நடத்தினார் தயாரிப்பாளர் தனஞ்சயன். படத்தின் டைட்டில் என்ன என்று கண்டு பிடிப்பதே போட்டி. அதில் பலரும் ஆர்வமாக கலந்துக்கொண்டனர்.

அதிகம் படித்தவை:  தன்னுடைய கலையுலக வாழ்க்கையில் தனக்கு பிடித்தமானவர்களைப்பற்றி பகிர்ந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

இந்நிலையில்  இப்படத்தின் டைட்டில் மற்றும் அதன் முதல் லுக் போஸ்டரை சிவ கார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப்படத்திற்கு “மிஸ்டர். சந்திரமௌலி” என்று பெயர் வைத்துள்ளார் இயக்குனர் திரு.

மிடில் கிளாஸ் குடும்பப் பின்னணியில் நடக்கும் ஆக்ஷன் படம். அரசு அதிகாரியாக பணி புரியும் காத்திக், பாக்சாராக வரும் கௌதம்  கார்த்திக். இப்படத்தில் இயக்குனர்கள் அகத்தியன் மற்றும் மஹேந்திரன் நடிப்பது இரண்டு நாட்களுக்கு முன் உறுதியானது. கதாநாயகிகளாக ரெஜினா கேசன்ட்ரா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கின்றனர். காமெடியனாக சதிஷ் நடிக்கிறார். நவம்பர் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளது. அப்பா மகன் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் பதிவு செய்யப் போகிறார் இயக்குனர்.

அதிகம் படித்தவை:  சென்னை ஷாப்பிங் மாலில் பரபரப்பு; நள்ளிரவில் சுற்றி வளைத்த கமாண்டோ படை

‘மற்றவர்களுடன் நடிப்பதை விட, குடும்பத்தினருடன் நடிப்பது என்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இப்படத்தில் என்னுடன் நடிக்கப்போகிறவர் ஒரு லெஜெண்ட், மேலும் எனது தந்தையும் ஆவார், அதனால் படபடப்பாகவும், அதே சமயம் ஆர்வமாகவும் உள்ளேன். அவருடன் இணைந்து நடிக்கப்போகிறான் என்ற சந்தோசமே மிகுதியாக உள்ளது’ என்று கூறினார் கவுதம் கார்த்திக்.

நம்ம நவரச நாயகன் கார்த்திக் மௌன ராகம் படத்தில் பேசி, அந்தக்காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட மிஸ்டர்.சந்திரமௌலி என்பதையே அவர் மகன் படத்திற்கு தலைப்பாக வைத்தது மிக பொருத்தமான விஷயம் என்று சொல்லி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.