Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருவி பட இயக்குனரின் “வாழ்” பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் வெளியானது. அட இத்தனை ஆச்சர்யங்கள் உண்டா இப்படத்தில் ..
சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகும் மூன்றாவது படம் தான் வாழ். ( கனா, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா ) சிவகார்த்திகேயனின் அப்பா பிறந்த நாளன்று தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்சுடன் இணைந்து இப்படத்தை மதுரம் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அருவி பட இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு ஷெல்லி இசை. பிரதீப் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
Expecting An Extraordinary Movie 🙂 Fingers crossed Musically as well as visually And Also Content Strength ❤️ this will be an Extraordinary experience, Having Great Hopes on @thambiprabu89 and @SKProdOffl ????? https://t.co/xrOGm6XFJJ
— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) July 15, 2019
முதல் படம் ஹிட் என்றாலும், இரண்டாவது ப்ரொஜெக்ட் தள்ளி தான் போனது இயக்குனருக்கு. அதற்கு முக்கிய காரணம் இப்படத்திற்கான இவரின் மெனக்கெடல் தான். அருண் பிரபு, ஏற்கெனவே படத்திற்கான இடம் தேர்வு, திரைக்கதை அமைத்தல் என முழு ரெடியான பின் தான் ஷூட்டிங் சென்றாராம்.

Vaazhl
படப்பிடிப்பு 75 நாளில் முடிந்திருக்கிறது. படத்தின் கதை களம் இயர்கைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டதால், தேர்ந்தெடுக்கப்பட்ட 100 இடங்களில் சிறப்பாக நடந்துள்ளதாம் படப்பிடிப்பு. மேலும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டதாம்.
