சிவகார்த்திகேயன்

SK – Sivakarthikeyan -SEEMARAJA – FLP

கடந்த பிப்ரவரி 17 தனது 33 வது பிறந்தநாளைக் கொண்டாடினார் சிவா .
அதனை முன்னிட்டு பொன்ராம் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. ‘சீமராஜா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் செப்டம்பர் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

SK

மேலும் அடுத்த இவர் நடிக்க இருக்கும் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் ராகுல் ப்ரீத் நடிப்பதாகவும் தகவல்கள் வந்தது. இந்நிலையில் சிவகாத்திகேயன் அவர்கள் “சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ்” என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரமபித்துள்ளார்.

அருண் ராஜா காமராஜ்

Atlee – Arun Raja Kamaraj

இவர் ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா. பாடல்கள் எழுதுவது, இசையமைப்பது, நடிப்பு என்று கலக்குபவர். கபாலி படத்தின் ரஜினியின் ஒபெநிங் சாங், ஜிகர்தண்டா படத்தின் டிங் டாங் பாடல் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட ஒன்று. முன்னரே சில மாதங்களுக்கு முன் தான் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போவதாக ஒரு பெட்டியில் கூறியிருந்தார். மேலும் இப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி தான் திரைக்கதை அமைந்துள்ளதாகவும் சொல்லி இருந்தார்.

சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ்

இந்நிலையில் இன்று தன் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக தன் நண்பன் அருண் ராஜா காமராஜ் இயக்கும் முதல் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது.

மேலும் இப்படத்தின் பூஜை இன்று காலை லால்குடியில் நடந்துள்ளது. சத்தியராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் முக்கிய ரோல்களில் நடிக்கவுள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Sivakarthikeyan Productions
Sivakarthikeyan Productions
Sivakarthikeyan Productions
Sivakarthikeyan Productions

விரைவில் மற்ற தகவல்கள் அறிவிக்கப்படும்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

Nanbaen Da

நண்பேன் டா !!