நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் சினிமாவில் ஹோரோவாக அறிமுகமானார், இதனை தொடர்ந்து இவருக்கு பக்கபலமாக அமைந்தது ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம், மான் கராத்தே,ரெமோ, வேலைக்காரன் என தொடர்ந்து நடித்துவந்தார் இதில் வெற்றியும் பெற்றார்.

director-karthik
director-karthik

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புது அவதாரம் எடுத்துள்ளார் ஆம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார் கனா படத்தில், இந்த படத்தை தயாரிப்பதோடு படத்தில் ஒரு பாடலும் பாடி அசத்தியுள்ளார் மேலும் கேஸ்ட் ரோலில் நடித்துள்ளார், அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளன இப்படத்தின் இசை & டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் படக்குழு அனைவரும் கலந்துகொண்டார்கள் அதில் பேசிய சிவகார்த்திகேயன் தனது புது படத்தின் தயாரிப்பு பற்றி கூறியுள்ளார் பெயரிடபடாத இந்த படத்தை யூ-டியூபில் ஃபேமஸான ‘ப்ளாக் ஷீப்’ டீம்மில்  இருக்கும் கார்த்திக் தான் இயக்க இருக்கிறார்கள் இதில் ஹீரோவாக சரவணன் மீனாட்சி ரியோ ராஜ் நடிக்க இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here