சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் பட்ட அவமானம்.. பூமரங் போல RJ பாலாஜியும் சந்திக்கும் பிரச்சனை

ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் இன்று தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து அசத்தி வருகிறார். தன்னை எப்படி மக்கள் பார்க்கிறார்களோ, நமக்கு என்ன வருமோ அதையே செய்து அனைவரையும் கவர்ந்து வருகிறார் பாலாஜி. எல்கேஜியில் ஆரம்பித்த அவரது ஹீரோ பயணம் ஓரளவு சக்ஸஸ்புள் ஆக தான் போய்க்கொண்டு இருக்கிறது.

இன்று வரை அவரது இயல்பான நடிப்பை பார்த்து மக்கள் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அவரின் படங்கள் ஆகிய மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷங்க போன்ற படங்கள் அவருக்கு நல்ல வசூலை பெற்று தந்து அவரை ஒரு வெற்றிகரமான இயக்குனராக வலம் வரச் செய்துள்ளது.

Also Read: ஆர் ஜே பாலாஜியின் நக்கலான நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம்.. முழு படத்தை OTT-யில் பார்க்க கிளிக் செய்யவும்

தற்போது இயக்குனர் கோகுல் இவரை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். படத்தின் பெயர் சிங்கப்பூர் சலூன். இது முழு நீள காமெடி படமாக வர இருக்கிறது. ஆர் ஜே பாலாஜியின் படங்கள் என்றால் எப்பொழுதுமே மக்கள் மத்தியில் ஒரு கிரேஸ் இருந்து வருகிறது.

இப்பொழுது இந்த படத்துக்கு ஹீரோயின் தேடும் வேலையில் இறங்கியுள்ளார் இயக்குனர். இதற்காக பல புதுமுக ஹீரோயின்களை தேடி வருகின்றனர். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வந்த புதிதில் அவருடன் நடிக்க பல ஹீரோயின்கள் தயங்கினார்கள்.

Also Read: மிகப்பெரிய பிசினஸில் பிரின்ஸ்.. பல கோடியில் கல்லா கட்ட தயாராகும் சிவகார்த்திகேயன்

இதனால் பட்ட அவமானத்தை வெளிப்படையாக மேடையிலேயே கூறினார் சிவகார்த்திகேயன். அது தற்போது ஆர் ஜே பாலாஜிக்கும் நடந்து வருகிறது. இவருடன் நடிக்க ஹீரோயின்கள் தயங்குகின்றனர். தற்போது பழைய நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அனேகமாக அவர்தான் இந்த படத்தின் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ந்து வரும் நடிகர்களுக்கு கோலிவுட்டில் இது ஒரு பெரும் சாபமாக உள்ளது. இதனை எல்லாம் அடித்து நொறுக்கி வசூலில் சிவகார்த்திகேயன் முதல் ஐந்து ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.

Also Read: கழுத்தை நெரிக்கும் கடன்.. ஒரே படத்தால் நாலாபக்கமும் மாட்டி முழிக்கும் சிவகார்த்திகேயன்

- Advertisement -

Trending News