Connect with us
Cinemapettai

Cinemapettai

sivakarthikeyan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் பண்ணிய பக்கா பிளான்.. வெளியில் சொல்ல முடியாமல் அவஸ்தைப்படும் தயாரிப்பாளர்

ஹீரோ என்ற மாபெரும் சரித்திர காவியம் வெளியாவதற்கு முன்னர் மேடைக்கு மேடை மைக் பிடித்து பேசி வந்த சிவகார்த்திகேயன் அதன்பிறகு கப்சிப் என்று ஆகிவிட்டார்.

அதற்கு காரணம் அந்த படத்தின் தோல்வி தான். ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ், ஹிந்தியில் கிரிஷ் போன்ற படங்களுக்கு போட்டியாக உருவான ஹீரோ படம் அதல பாதாளத்தில் விழுந்தது.

இருந்தாலும் சிவகார்த்திகேயனுக்கு மார்க்கெட் ரீதியாக எந்த ஒரு சிக்கலும் இல்லை. ஒரு புதிய முயற்சி செய்து அந்த படம் தோல்வி பெற்றாலும் அடுத்ததாக தன்னுடைய பழைய பார்முலாவில் கமர்சியல் படம் நடித்து வெற்றி கொடுத்து விடுவார்.

ஆனால் கடைசியாக வெளிவந்த சில படங்களில் சிவகார்த்திகேயனின் வெற்றியை விட தோல்விகள் அதிகமாக இருந்துள்ளதால் அடுத்தடுத்த படங்களில் கவனமாக கதை தேர்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் டாக்டர் மற்றும் அயலான் போன்ற படங்கள் உருவாகின்றன. முதலில் டாக்டர் 2020 கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டும், அயலான் படம் 2021 சம்மருக்கும் வெளியாக இருந்தது.

ஆனால் தற்போது இந்த இரண்டு படங்களின் ரிலீஸும் மாற்றப்பட்டுள்ளது. இந்த ரிலீஸ் தேதியை முடிவு செய்தவர் சிவகார்த்திகேயன் தானாம்.

திடீரென சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பில் உருவாகும் டாக்டர் படம் வெளியாவதால் அயலான் படத்தின் தயாரிப்பாளர் பெரிய சிரமத்திற்கு ஆளாகி விட்டாராம்.

sivakarthikeyan

sivakarthikeyan

இருந்தாலும் சிவகார்த்திகேயனிடம் இதைப் பற்றி சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம் அந்த தயாரிப்பாளர்.

Continue Reading
To Top