Connect with us
Cinemapettai

Cinemapettai

சிவகார்த்திகேயன் செய்யப்போகும் நரித் தந்திரம்.. உஷாரய்யா உஷாரு என வேகமாக பரவும் தகவல்

sivakarthikeyan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் செய்யப்போகும் நரித் தந்திரம்.. உஷாரய்யா உஷாரு என வேகமாக பரவும் தகவல்

சங்கர், கமல் போன்ற பிரபலங்கள் செய்யும் வசூல் வேட்டையை தற்பொழுது கையில் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த மாதிரி வசூல் செய்யும் திட்டங்கள் சங்கர், கமல் போன்றவர்கள் சிறப்பாக செய்வார்கள் அந்த சிறப்பான வழியை சிவகார்த்திகேயன் செய்ய உள்ளார்.

அதாவது ஒரு படத்தை தயாரிக்கும் பொழுது வரும் லாபம் நஷ்டங்களுக்கு ஒரு தயாரிப்பாளருக்கு எந்த அளவுக்கு வலியை உருவாக்கும் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் நடிகர்கள் தனது வேலையை மட்டும் செய்து விட்டு சென்று விடுவார்கள். அதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ள நடிகர்கள் சிறு அளவு பணத்தை முதலீடு செய்து பெருமளவு பணத்தை வசூல் செய்வார்கள் இது தான் கணக்கு.

நடிகர் கமலஹாசன் தயாரிக்கும் படங்களில் அவருடைய நுட்பமான சினிமா ஆராய்ச்சிகளை அவருடைய தயாரிப்பில் செய்ய மாட்டார். ஓரளவு கமர்ஷியலாக படத்தை எடுத்துவிட்டு அதில் நன்றாக கல்லா கட்டுவார். இதே ஆளவந்தான் படத்தில் தனது தொழில்நுட்ப யுத்திகளை வேறொரு தயாரிப்பாளர்களின் செலவுகளில் தனது திறமையை நிரூபித்தார். படம் ஓடினால் நல்லது இல்லவிட்டாலும் கமலுக்கு ஒன்றும் இல்லை.

ஷங்கரும் அதே மாதிரி தன்னுடைய பிரம்மாண்ட படங்கள் என்ற பெயரில், மலைகளுக்கு பெயிண்ட் அடிப்பதும், கிராபிக்ஸ் காட்சிகளை தேவையே இல்லாமல் பாடல்களில் திணிப்பதும் என்று அவருடைய கணக்குக்கு தனியாக செலவு செய்து விடுவார். அவருக்கும் சரி படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் எந்த கவலையும் இல்லை. இப்பொழுது இதே பாணியில் சிவகார்த்திகேயன் புது முடிவை எடுத்துள்ளார்.

அதாவது சினிமா படங்களை கமர்ஷியலாக எடுப்பதாக இருந்தால் அவருடைய தயாரிப்பு கம்பெனிகள், அதே நாட்டுக்கு நல்லது சொல்வது போன்ற படமோ, புதிய டெக்னிக்கல் படமாகவோ, புதிய கதை, புதிய தொழில்நுட்பம் போன்ற படமகா இருந்தால் வேறு ஒரு தயாரிப்பு என இரண்டாகப் பிரித்து விடுகிறார்.

ஏனென்றால் கமர்சியல் படத்தில் கண்டிப்பாக ஒரு கல்லா கட்டலாம், நஷ்டம் இல்லாமல் பணம் வந்துவிடும். இதே வேறு மாதிரியான வித்தியாசமான படங்களில் கல்லா கட்டுவதில் சந்தேகம் ஏற்படும். இப்பொழுது இந்தப் பாணியை தேர்ந்தெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

எது எப்படியோ தியேட்டர்களில் படம் வருவதாக இருந்தால் அது 3டி படமாகவோ, பெரிய பட்ஜெட் படமாகதான் இருக்கும். அதனால் சிவகார்த்திகேயன் படம் தியேட்டரில் வெளிவந்தால் அடுத்தவர் தயாரிப்பு. OTT-யில் வெளிவந்தால் சிவகார்த்தியன் தயாரிப்பு இப்படித்தான் கண்டிப்பாக இனி வரும் படங்களும் இருக்குமாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top