ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மொழி சினிமா பிரபலங்களில் யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று தவறாமல் வெளியிட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே தளபதி விஜய் அதில் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அஜித் இரண்டாவது இடத்தையும் மற்றும் சூர்யா மூன்றாவது இடத்தையும் பெற்று வருகின்றனர்.
ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட பிரபலங்கள் எவ்வளவு பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை வைத்து இந்த லிஸ்ட் ரெடி செய்யப்படுகிறது. விஜய் மற்றும் அஜீத் ஆகிய இருவரின் ரசிகர்களும் ஏதாவது ஒரு வகையில் தங்களுடைய நடிகர்களை பற்றி சமூக வலைதளங்களில் தினமும் பதிவிட்டு வருகின்றனர்.
அவர்களைத் தொடர்ந்து சூர்யாவின் சூர்யா40 பட அறிவிப்புகள் வெளியானதால் கடந்த மாதம் சூர்யா கொஞ்சம் பிரபலமாக இருந்தார். அதனைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் தனுஷ் மற்றும் 5வது இடத்தில் விஜய் சேதுபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கர்ணன் மற்றும் உப்பென்னா போன்ற படங்களின் மூலம் இந்த இரண்டு நடிகர்களும் அதிகமாக சமூக வலைதளங்களை கவர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து 6வது இடத்தில் சிவகார்த்திகேயன் உள்ளார். டாக்டர் பட பாடல்கள் வெளியிட்டதால் சிவகார்த்திகேயன் சமூக வலைதளங்களில் பிசியான நடிகராக வலம் வருகிறார். ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதுவும் இப்போது வந்த சிவகார்த்திகேயன் கூட இந்த லிஸ்டில் ரஜினிக்கு முன்னாடி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இருந்தாலும் ரஜினியின் அடுத்த படத்தை பற்றிய எந்த செய்தியும் வெளிவராததால் ரஜினியைப் பற்றிய பதிவுகள் அதிகமாக சமூக வலைதளங்களில் பதிவிடவில்லை என்பதே இதற்கு காரணம் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
விரைவில் அண்ணாத்த படத்தை பற்றிய ஏதாவது ஒரு அப்டேட் வெளியாகி அதை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பிரபலப்படுத்தினால் அடுத்த மாதமே இந்த லிஸ்ட் மாற அதிக வாய்ப்பு உள்ளது.