fbpx
Connect with us

லிங்குசாமி அழைத்தும் சிவகார்த்திகேயன் வர மறுப்பு ? நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ரத்து

லிங்குசாமி அழைத்தும் சிவகார்த்திகேயன் வர மறுப்பு ? நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ரத்து

Sivakarthikeyan-Science Fiction Filmரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களின் தொடர்பு எல்லைக்குள் சிவகார்த்திகேயன் வருவதில்லையாம். அது கூடப் பரவாயில்லை, அவரை வைத்து படத்தைத் தயாரித்த லிங்குசாமியின் தொடர்பு எல்லைக்குள் கூட அவர் வருவதில்லையாம். “ரஜினி முருகன்” படத்தின் வெற்றிக்கு மீடியாக்களும் ஒரு முக்கிய காரணம். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தங்களது படத்திற்கு வெற்றி கிடைக்க காரணமாக இருந்த பத்திரிகையளார்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசைப்பட்டாராம் லிங்குசாமி.

ஆனால், சிவகார்த்திகேயனைத் தொடர்பு கொண்டு பேசிய போது அதற்கெல்லாம் வர முடியாது என மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பட வெளியீடு தொடர்பாக ஏற்கெனவே இருவருக்கும் இடையில்  மோதல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல கடைசி நேரத்தில் சிவகார்த்திகேயனிடம் இருந்தும் சில பல கோடிகளை வாங்கித்தான் படத்தை வெளியிட்டுள்ளார்கள். படம் வெளியான அன்று சில பத்திரிகையாளர்களிடம் மட்டும் சிவகார்த்தியேன் இந்தப் படத்தில் என்னுடைய சம்பளம் மைனஸ் 50 லட்சம் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.

படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் இல்லாமல் பத்திரிகையாளர்களைச் சந்தித்து எப்படி நன்றி சொல்வது என்று அந்த திட்டத்தையே கைவிட்டு விட்டாராம் லிங்குசாமி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top