
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டாக்டர். நீண்ட நாளுக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தற்போது சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்துள்ளார்.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் அயலான் படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படங்களை முடித்து விட்டு சிவகார்த்திகேயன் அட்லீயின் உதவி இயக்குனரான அசோக்குமார் படத்தில் நடிக்க உள்ளார்.
அசோக் குமார் இயக்கும் படத்திற்கு சிங்கப்பாதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. சிங்கப்பாதை படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளார்.
சிங்கப்பாதை படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் கேட்டு பாருங்கள் என்று சிவகார்த்திகேயன் சொல்லியுள்ளார். ஆனால் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர், நலன் குமாரசாமி இயக்கத்தில் காமெடி கௌபாய், தலைநகரம் 2 ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இதனால் சிங்கப்பாதை படத்தில் வடிவேலு நடிக்க மறுத்து விட்டாராம். இதனால் வடிவேலுக்கு பதிலாக நகைச்சுவை நடிகர் சூரி நடிக்கலாம். சிவகார்த்திகேயன் டான் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சிங்கபாதை படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவருக்கு இருக்கும் பட வாய்ப்பை பார்த்தால் கால்சீட் கொடுப்பது சற்று கடினம் தான். ஆனால் ,ஏதோ உள்குத்து இருப்பதாகவும் சம்பள பிரச்சனை ஒரு காரணமாக இருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
