சந்தானம், சிவகார்த்திகேயன், வரிசையில் விஜய் டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் மா.கா.பா. ஆனந்த்.சில படங்களில் நடித்தும் இன்னும் வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் மா.கா.பா.ஆனந்த் தற்போது ஹீரோவாக நடித்து வரும் படம் ‘மாணிக்’.இப்படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் மார்டின், இயக்கிய பல குறும்படங்கள் பல்வேறு விருது போட்டியில் பங்கேற்றதுடன், கலைஞர் டிவி-ன் நாளைய இயக்குநர் சீசன் 5 போட்டியில் வெற்றி பெற்று டைடிலையும் வென்றுள்ளது.

மா.கா.பா.ஆனந்துக்கு ஜோடியாக ‘எதிர் நீச்சல்’ படத்தில் நடித்த சூசா குமார் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில், இரண்டாவது கதாநாயகனாக வத்சன் நடித்திருக்கிறார்.மோஹிதா சினி டாக்கீஸ் சார்பாக மா.சுப்பிரமணியம் தயாரித்துள்ள இப்படம் ஃபேண்டசி கலந்த காமெடிப் படமாக உருவாகியுள்ளது.இந்த படத்திற்கு தரண் குமார் இசை அமைக்கிறார்.எம்.கே.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

அதிகம் படித்தவை:  சண்டக்கோழி 2 கம்பத்து பொண்ணு வீடியோ பாடல்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் போஸ்ட்புரடக்ஷ்ன் பணிகள் நடைபெற்று வந்தன.தற்போது ‘மாணிக்’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.மாணிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட வேண்டும் என்று சிவகார்த்திகேயனை அணுகியபோது இன்று நாளை என இழுத்தடித்திருக்கிறார்.இதற்கு மேல் இவரை நம்பிப் பிரயோஜனமில்லை என்பதால், விஷாலை அணுகியுள்ளனர்.
‘துப்பறிவாளன்’ படத்தின் ரிலீஸுக்காக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நேரத்திலும், மா.பா.கா. ஆனந்த் மற்றும் மாணிக் படக்குழுவினருக்கு உற்சாகம் அளிக்கும்வகையில் அத்தனை பிசியிலும் ‘மாணிக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அறிமுகப்படுத்தியிருக்கிறார் விஷால்.Sivakarthikeyan-Muniskanth-Ramadoss

அதிகம் படித்தவை:  அடையாளம் தெரியாமல் மாறிப்போன தேவசேனா. அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்த நிகழ்வின் போது ஹீரோ மா.கா.பா.ஆனந்த், இயக்குநர் மார்டின், தயாரிப்பாளர் எம்.சுப்பிரமணியம், ஒளிப்பதிவாளர் எம்.ஆர்.பழனிகுமார், எடிட்டர் கே.எம்.ரியாஸ், இணை இயக்குநர் மணி ஆகியோர் உடன் இருந்தார்கள்.விரைவில் மாணிக் படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ள படக்குழுவினர் அதை தொடர்ந்து பாடல்களையும், பிறகு ‘மாணிக்’ படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.